செங்குன்றம் காவல்–விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்..
செங்குன்றம், ஆகஸ்ட் 27..
ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையர் பாலாஜி தலைமையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் பாதுகாப்பு விழிப்பு உணர்வு கலந்தாய்வுக் கூட்டம் செங்குன்றம் பைபாஸ் சாலையில் உள்ள எஸ்.எஸ்.ஆர். திருமண மண்டபத்தில் நடைபெற்றது.காவல் சரக உதவி ஆணையர்கள் ராஜா ராபர்ட் (செங்குன்றம்), பிராங்கிளின் டி ரூபன் (அம்பத்தூர்), சங்கர் (பொன்னேரி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செங்குன்றம் காவல் ஆய்வாளர் விஜயகுமார் வரவேற்றார்.கூட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் வேலுமணி (மீஞ்சூர்), கிளாஸ்டின் டேவிட் (சோழவரம்), புருசோத்தமன் (காட்டூர்) உள்ளிட்ட காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் ஆன்டிலின் ரமேஷ், ஜனார்த்தனம் மற்றும் காவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை எந்தெந்த இடங்களில் வைப்பது, எப்படி எடுத்துச் செல்வது, எஙகே கரைப்பது உள்ளிட்ட வழிமுறைகள், நெறிமுறைகள் குறித்துவிளக்கப்பட்டது.
கூட்டத்தில் செங்குன்றம், சோழவரம், அம்பத்தூர், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விநாயகர் சிலை அமைப்பு குழுவினர்,ஆன்மிக பெரியோர்கள், கிராம நிர்வாகிகள், இளைஞர்கள், கலந்து கொண்டனர்.

