fbpx
RETamil Newsஉலகம்

கொரோனா நோயாளி குணமடைய எத்தனை நாளாகும் ? – உலக சுகாதார நிறுவனம்

How much time will take to cure corona virus ? - see what WHO says

உலகையே தாக்கி அச்சுறுத்தி கொண்டிருக்கும் இந்த கொரோனா வைரசால் பல நாடுகள் கதிகலங்கி உள்ளன. சில நாடுகளில் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. தற்போது வரையும் இதன் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர் குணமாக எவ்வளவு நாட்கள் ஆகும் என்ற சந்தேகம் இன்று பல மக்களிடமும் எழுந்துள்ளது.

அவ்வாறு ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை பொறுத்தே அதிலிருந்து அவர் குணமடைய எவ்வளவு காலம் ஆகும் என்பதை கூற முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

ஏனெனில் இது வயது , பாலினம் மற்றும் அவரது உடல் நல பிரச்சினைகள் இவற்றை சார்ந்ததாகும். சிலர் இந்த நோய்யுலிருந்து விரைவில் மீண்டுவிடுவார்கள். மற்றும் சிலருக்கு இது நீண்ட கால பிரச்சினையை ஏற்படுத்தக்கூடும். எந்தளவிற்கு , எவ்வளவு காலம் வரை இந்த பிரச்சினையை எடுத்துக்கொள்கிறோமோ அதை பொறுத்தே எப்போது குணமடைய படுவார்கள் என்பதை கூறமுடியும்.

இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு முதலில் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருக்கும். சிலருக்கு அந்த அறிகுறிகளுடன் உடல்வலி, தலைவலி, உடல்சோர்வு மற்றும் தொண்டைவலி ஆகியவைகளும் இருக்கும்.

ஆரம்பத்தில் வறட்டு இருமலாக இருக்கும் ,பின்னர் போகப்போக சிலருக்கு சளி வரத்தொடங்கும். இவ்வாறு இருக்கும் போது அதிகஅளவில் நீராகாரங்கள் எடுத்துக்கொள்வதுடன், நல்ல ஓய்வு மற்றும் பாராசிட்டமால் மாத்திரைகளை சாப்பிட்டு இதை சரிசெய்ய முடியும்.

எனவே இலேசான அறிகுறி உடையவர்கள் சீக்கிரத்தில் குணமடைந்து விடுவார்கள் , இருமல் குணமாக நீண்ட காலம் ஆனாலும், ஒரு வாரத்திற்குள் காய்ச்சல் குறைந்துவிடும். சராசரி இரண்டு வாரத்திற்குள் இத்தொற்றிலிருந்து மீண்டுவிடுவார்கள் என சீன தரவுகளை ஆராய்ந்த உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close