அகரப்பொதக்குடி–காமராஜர் பிறந்த தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது..
இன்று அகரப்பொதக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 15 .7 .2025 காமராஜர் பிறந்த தினம் கல்வி வளர்ச்சி நாளாக சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர் திருமதி ஜெ. இன்பவேணி அவர்கள் தலைமையேற்று பள்ளி மாணவர்களுக்கு காமராஜரின் பிறந்தநாள் ஏன் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது என்பது குறித்து சிறப்புரையாற்றினார் மேலும் இந்நிகழ்வில் கும்பகோணம் கிரீன் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் தலைவர் சபீர் அகமது செயலர் முனாப் சேர்மன் அண்ணாமலை முன்னாள் தலைவர் சுந்தர்ராஜன் புதிய தலைமுறை இயக்குனர் எத்தீஸ் ஆகியோர் கலந்துகொண்டு பள்ளிக்கு தேவையான ஸ்மார்ட் டிவி மற்றும் மாணவர்களுக்கு தேவையான எழுதுபொருள்களை வழங்கினர். காமராஜர் பிறந்த நாளில் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வட்டார கல்வி அலுவலர் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் பெற்றோர்கள் வழங்கினர் இறுதியில் ஆசிரியர் திருமதி ஜே சுந்தரி அவர்கள் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது