fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

மோடியின் டுவிட்டர் கணக்கை பாலோ செய்பவர்களில் 50 % போலி…! அதிர்ச்சி தரும் ஆய்வு

Fake followers in PM Modi twitter account

டெல்லி:

டிவிப்ளோமசி ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கை பாலோ செய்பவர்களில் 60 சதவீதம் பேர் போலியானவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்களிலேயே டிவிட்டரில் அதிகமான பின்தொடர்பாளர்களை கொண்டவர் பிரதமர் மோடி. அவர் தீவிரமாக சமூகவலைதளங்களில் இயங்கியும் வருகிறார்.

இந்நிலையில் அவரை பின் தொடர்பவர்களில் 60 சதவீதம் பேர் (2.4 கோடி)  போலியான கணக்கு வைத்திருப்பவர்கள் என ஒரு ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. டிவிப்ளோமசி என்ற நிறுவனம் என்ற நிறுவனம் இதை கூறியுள்ளது.

உலக தலைவர்களின் டிவிட்டர் பாலோயர்களைப் பற்றி நடத்திய ஆராய்ச்சியில் இந்த முடிவு வெளியாகியுள்ளது. இந்த ஆய்வு டிவிட்டர் அல்காரிதம், மற்றும் சம்மந்தப்பட்ட நபர் கடைசியாக பதிவு செய்த டிவிட் மற்றும் அவர்கள் வேறு யார் யாரை பாலோ செய்கிறார்கள் போன்றவற்றை வைத்து கணிக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close