ஈரோடு–புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் சிக்கினர்..
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர்கர் கர்நாடகா மாநிலத்தில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்து பவானிசாகர் அருகே தாண்டாம்பாளையம் மேட்டில் உள்ள ஒரு வீட்டில் விற்பனை செய்வதாக பவானி சாகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீ சார் அங்கு சென்று சோதனை நடத்தியபோது புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதுதொடர்பாக நடத்திய விசாரணையில் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை தண்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த அனுமத்சிங் என்பவருடைய மகன் பகவான் சிங் (வயது 30), தாளவாடி சத்தி ரோட்டில் வசிக்கும் ஆசிப்செரிப் (28) ஆகியோர் வீட்டை வாடகைக்கு எடுத்து புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் வீட்டில் இருந்த 130 கிலோ புகை யிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து அறிந்ததும் வீட்டின் உரிமையாளர் விவேக் தலைமறைவா னார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.