fbpx
Others

தென் கொரியாவில்–விபத்துக்கு முன் விமானத்திற்கு என்ன நடந்தது ? 177 பேர் பலி

south korea plane crash: தென் கொரியா விமான விபத்து167 பேர் உயிரிழப்பு-  விபத்து ஏற்பட்டது எப்படி? எதனால்? - BBC News தமிழ்

தென் கொரியாவில் விமானம் விபத்துக்குள்ளானதில் 2 பேரை தவிர மற்ற 179 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுளள்து. தென் கொரியாவின் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விமானம் விபத்துக்குள்ளானது.175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் பாங்காக்கில் இருந்து தென் கொரியா சென்ற விமானம் லேண்டிங் கியர் சரியாக இயங்காததால் ஓடு பாதையில் இருந்து விலகி தடுப்புச் சுவர் மீது மோதி விமானம்தீப்பிடித்தது இந்த விபத்தில், இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார் எனவும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் ஒரு தீயணைப்பு துறை அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.இந்த விபத்தில் உயிர் பிழைத்த இருவரும் விமானக் குழுவை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.விமானத்தின் பின்புறத்தில் உள்ள பயணிகளை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருவதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.விமான பயணிகளில் 173 பேர் தென் கொரியர்கள் எனவும், 2 பேர் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் யோன்ஹாப் செய்தி முகமை கூறுகிறது. ஆனால், பறவை மோதல் அல்லது மோசமான வானிலை விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றுதென் கொரியா தீயணைப்புத் துறை ஊகிக்கிறது  இந்த விபத்துக்கான சரியான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது என்று முவான் தீயணைப்புத் துறையின் தலைவர் லீ ஜியோங்-ஹியூன் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.”விமானத்தின் வால் பகுதி அப்படியே இருக்கிறது. ஆனால் விமானத்தின் மற்ற பகுதிகளின் வடிவத்தை யாராலும் அடையாளம் காண முடியவில்லை”, என்று அவர் கூறினார்.சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளஉறுதிப்படுத்தப்படாத காணொளியில், விமானம் சறுக்கிக்கொண்டே ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று சுவரில் மோதுவது தெரிகிறது. பின்னர் இந்த விமானத்தில் தீப்பிடித்தது.80 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 30 தீயணைப்பு வாகனங்கள் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தது.தற்போது முவான் சர்வதேச விமானநிலையத்திலிருந்து அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களும்ரத்துசெய்யப்பட்டுள்ளதாகயோன்ஹாப் செய்தி முகமை தெரிவித்துள்ளது.தென்கொரியாவின் இடைக்கால அதிபர் சோய் சாங்-மோக் விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டார். அவர் முவானில் இந்த பகுதியை “ஒரு சிறப்பு பேரிடர் மண்டலமாக” அறிவித்துள்ளார்.”இந்த விமான விபத்தில் ஏற்பட்ட இழப்புகள் காரணமாக கடுமையான சூழல் நிலவி வருகிறது. உயிரிழந்தவர்வர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்”, என்று அவர் கூறினார்.உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆதரவளிக்க அரசுதன்னால்இயன்றஅனைத்தையும்செய்யும்என்றுஅதிபர்அலுவலகம்தெரிவித்துள்ளது.விமானவிபத்தில்பாதிக்கப்பட்டவர்களிடம்ஜேஜூஏர்நிறுவனத்தின்தலைமைநிர்வாகஅதிகாரி  பொதுவெளியில்பகிரங்கமாக மன்னிப்புகேட்டார்.செய்தியாளர் சந்திப்பில், இந்த நிறுவனத்தின்

தென் கொரியா தலைமை நிர்வாக அதிகாரி கிம் இ-பே மற்றும் பிற அதிகாரிகள் தங்கள் தலையை தாழ்த்தி மணிப்பு கேட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருப்பதே தற்போது தங்களின் முன்னுரிமை என்று கிம் இ-பே கூறினார்.மேலும் இந்த விமான நிறுவனம், அதன் இணையதளத்தை கருப்பு நிறத்திற்குமாற்றிஆன்லைனில் மன்னிப்புகோரியது.முவான் தென் கொரிய தலைநகர் சோலில் இருந்து 288 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.விமான பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தரும் துறையாகத் தென் கொரியாவின் விமானப் போக்குவரத்துத் துறை கருதப்படுகிறது.ஜேஜூ விமான நிறுவன வரலாற்றில் இதுவே முதல் உயிரிழப்புகளைக் கொண்ட மோசமான விபத்தாகும். தென் கொரியாவின் மிகப்பெரிய குறைந்த கட்டண விமான நிறுவனமான இது 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close