fbpx
Others

திருவாரூர் மாவட்ட அளவிலான துளிர் வினாடி வினா போட்டிகள்…

டிச 01 இன்று திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான துளிர் மற்றும் ஜந்தர மந்தர் வினாடி வினா போட்டிகள் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பி.சங்கரலிங்கம் அவர்கள் தலைமையிலும்.மாவட்டத் துணைத் தலைவர்கள் நீலன் அசோகன், இயேசுதாஸ் ,நல்லாசிரியர் ஆர்ரசந்திரா, சு.தேவிகா, எம்.ராணி,த.பெருமாள்ராஜ்,வி.விஜயன்,ஆர்.கே.சரவணராஜன்,முன்னிலையிலும்வேலுடையார் மேல்நிலைப் பள்ளில் நடைபெற்றது மாநில செயலாளர் எம்.எஸ்.ஸ்டீபன்நாதன்துவக்க உரையாற்றினார்.ஓ.என்.ஜி.சின் குழும மேலாளர் பி.என்.மாறன்,மக்கள் தொடர்பு அலுவலர் முருகானந்தம் ஆகியோர் மாணவர்களை பாராட்டி பரிசுகளை வழங்கினர்.தலைமையாசிரியர் அகிலன் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட இணை செயலாளர்கள் எஸ்.சுபாகர் ,ந.மகேந்திரன் ,பி.விஜய் ,அ.அகிலன் ,பி.ஜெகதீஷ்பாபு திருவாரூர் ஒன்றிய தலைவர் சௌ.சுரேஷ் ,ஒன்றிய செயலாளர் மீனா.சாமிநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக மாவட்ட செயலாளர் கு.காந்திராஜன் வரவேற்புரை ஆற்றினார். ஒன்றிய பொருளாளர் மீனா மேகநாதன் நன்றியுரை வழங்கினார்.துளிர் மற்றும் ஜந்தர் மந்தர் போட்டிகளில்6,7,8 தமிழ் பிரிவில் முதலிடம். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தென்கரை ஆலத்தூர்.இரண்டாம் இடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தம்பிக்கோட்டை கீழக்காடு
மூன்றாம் இடம். அரசினர் உயர்நிலைப்பள்ளி பூந்தோட்டம்9,10 தமிழ் வழி பிரிவில் முதலிடம் ஜி.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருவாரூர்இரண்டாம் இடம் அரசு உயர்நிலைப்பள்ளி சேங்காலிபுரம்மூன்றாம் இடம் அரசினர் மேல்நிலைப்பள்ளி முன்னவால்கோட்டை11,12 தமிழ் வழி பிரிவில் முதலிடம் மன்ப உல் உலா மேல்நிலைப்பள்ளி கூத்தாநல்லூர்இரண்டாம் இடம் தேசிய மேல்நிலைப்பள்ளி மன்னார்குடிமூன்றாம் இடம் ஜி.ஆர்.எம் பெண்கள்மேல்நிலைப்பள்ளி திருவாரூர்6,7,8 ஆங்கில வழிப்பிரிவில் முதலிடம் தரணி வித்யா மந்திர் சீனியர் செகண்டரி ஸ்கூல் மன்னார்குடிஇரண்டாவது இடம் மன்ப-உல்-உலா மேல்நிலைப்பள்ளி கூத்தாநல்லூர்
மூன்றாவது இடம் தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மன்னார்குடி9,10 ஆங்கில வழி பிரிவில் முதலிடம் நியூ பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திருவாரூர்இரண்டாம் இடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நன்னிலம்மூன்றாவது இடம் தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மன்னார்குடி.11,12 ஆங்கில வழி பிரிவில் முதலிடம் ஸ்ரீ பாரதிதாசன் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி மன்னார்குடி, இரண்டாம் இடம் ஜி.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருவாரூர்
மூன்றாம் இடம் அரசினர் மேல்நிலைப்பள்ளி பூந்தோட்டம்.உள்ளிட்ட மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர் மாவட்ட அளவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவர்கள் மண்டல அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வர்.நிகழ்வில் மணிமேகலை நடுநிலைப்பள்ளி மாணவர்கள் வளர்த்த மரக்கன்றுகள் சிறப்பு விருந்தினர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது.
ONGC குழும மேலாளர் மாறன் பரிசுகளை வழங்கினார்..

Related Articles

Back to top button
Close
Close