GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு
மதுரையில் வேகம் பெறும் கொரோனா..! விளையாட்டாக இருக்கும் மக்கள்!
Madurai corona cases increases

மதுரை:
மதுரையில் ஒரே நாளில் 104 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மதுரையில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நேற்று ஒரே நாளில் 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
அதில் 58 பேரது பெயர்களை மட்டுமே அரசு அறிவித்தாலும், மீதி உள்ளவர்கள் பட்டியல் தொடர்ந்து வரும் நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
பல இடங்களில் மக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் உள்ளனர்.
சுகாதார முன் எச்சரிக்கை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் போதுமான அளவில் இல்லாமல் இருக்கிறது.
எனவே, அரசு தரப்பு உடனடியாக விரைந்து கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும்.
மாறாக, கொரோனா பரவல் மற்ற மாவட்டங்களை போல வேகமாக பரவ ஆரம்பித்து விடும் என்று மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
















