fbpx
Others

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 பேர் புதிய நீதிபதிகள்….

திருவாரூர் வரும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு! ஏற்பாடுகள் தீவிரம்! -  SeithipunalChennai Madras High Court Case Details High Court Madras Daily Orders  Temple Of Madras High Court Supremeபாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதில் 8 வழக்கறிஞர்கள், 7 மாவட்ட நீதிபதிகள் என மொத்தம் 15 பேரை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த 7-ம் தேதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து புதிய நீதிபதிகள் பதவியேற்பு விழா, உயர் நீதிமன்ற கலையரங்கில் நேற்று நடந்தது.புதிய நீதிபதிகள் 15 பேருக்கும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி தனித்தனியாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்வில், சென்னை உயர் நீதிமன்ற இந்நாள் மற்றும் முன்னாள் நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள், புதிய நீதிபதிகளின் குடும்பத்தினர், வழக்கறிஞர்கள், நீதித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர்.நீதிபதி கே.கோவிந்தராஜன்: உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்த இவர். 1972 மார்ச் 8 ம் தேதி குளித்தலையில் பிறந்தவர். 1994-ல் வழக்கறிஞராக பதிவு செய்த இவர்,சென்னைஉயர்நீதிமன்றம்மற்றும்உயர்நீதிமன்றமதுரைகிளையில்வழக்கறிஞராகநீண்டநெடியஅனுபவம்கொண்டவர்.நீதிபதி ரஜ்னிஷ் பதியால்: அமலாக்கத்துறை சிறப்பு அரசு வழக்கறிஞராக பதவி வகித்த இவர், 1973 பிப்.28 அன்று பிறந்தவர். 1996-ம் ஆண்டு சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முதுநிலை சட்டம் படித்துள்ளார்.நீதிபதி என்.ரமேஷ்:அமலாக்கத்துறை சிறப்பு அரசு வழக்கறிஞராக பணியாற்றிய இவர், 1973-ம் ஆண்டு பிறந்தவர். முதல் தலைமுறை வழக்கறிஞர். 1997-ம் ஆண்டு வழக்கறிஞராக பார் கவுன்சிலில் பதிவு செய்தார். வணிகச் சட்டத்தில் முதுகலை சட்டம் படித்துள்ளார். 2003 டிசம்பரில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில நீதித்துறை தேர்வில்தேர்ந்தெடுக்கப்பட்டு5ஆண்டுகளுக்கும்மேலாகசிவில்நீதிபதியாக பணியாற்றிய அனுபவமிக்கவர். தனது பணியை ராஜினாமா செய்துவி்ட்டு 2009 முதல் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.நீதிபதி ஜி.கே.முத்துக்குமார்: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தைச் சேர்ந்த இவர், 2020-21 காலகட்டங்களில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞராக பணியாற்றியவர். 1974-ம் ஆண்டு அக்டோபரில் பிறந்தார். பெங்களூரு பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பதிவு செயதார். திருப்பதி லட்டு, ஈரோடு மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுக்கொடுத்துள்ளார்.   நீதிபதி ஆர்.ராஜேஷ் விவேகானந்தன்: மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்த இவர், 1975-ம் ஆண்டு ஜன.3-ல் பிறந்தவர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாண்டவன்காடு பகுதியைச் சேர்ந்தவர். மதுரை சட்டக்கல்லூரியில் படிப்பை முடித்து 1998-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார். தொல்லியல்துறை, ஹோமியோபதி தேசிய ஆணையம் உள்ளிட்ட மத்திய அரசு துறைகளில் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார்.நீதிபதி எஸ்.ரவீக்குமார்: புதுச்சேரி அரசின் மாநில அரசு வழக்கறிஞராக பணியாற்றிய இவர், 1977 டிச.23-ல் சென்னையில் பிறந்தவர். கோவை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து 2000-ல் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு சார்பில் ஏராளமான வழக்குகளில் ஆஜராகியுள்ளார்.நீதிபதி என்.திலீப்குமார்: வருமான வரித்துறை, சுங்கத்துறை, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் என மத்திய அரசு வழக்கறிஞராக பணியாற்றிய இவர், 1980 மார்ச் 22-ல் பிறந்தவர். சிவகாசியை சேர்ந்த இவரது தந்தை நாகராஜன் தொழிலதிபராக உள்ளார். தாயார் அமுதா. சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்து 2002-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்து மத்திய அரசுக்காக பல்வேறு வழக்குகளில் ஆஜராகியுள்ளார்.நீதிபதி இ.மனோகரன்: சென்னை உயர்நீதிமன்றத்தில்தமிழகஅரசின்பல்வேறுதுறைகளுக்குஅரசுவழக்கறிஞராகவும், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திலும் பணியாற்றிய இவர், 1978 அக்.27-ல் பிறந்தவர்.சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும், சிங்கப்பூரில் முதுகலை படிப்பையும் முடித்து 2003-ம் ஆண்டு முதல் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

<div class="paragraphs"><p>கே.கோவிந்தராஜன்,&nbsp;ரஜ்னிஷ் பதியால்,&nbsp;ஜி.கே.முத்துக்குமார்,&nbsp;ஆர்.ராஜேஷ் விவேகானந்தன்</p></div>

கே.கோவிந்தராஜன், ரஜ்னிஷ்பதியால், , ஜி.கே.முத்துக்குமார், ஆர்.ராஜேஷ் விவேகானந்தன்

Related Articles

Back to top button
Close
Close