செங்குன்றம் காவல் சார்பில் கல்லூரி மாணவிகளிடையே போதைக்கு எதிரான விழிப்பு உணர்வு..

செங்குன்றம், ஆவடி காவல் ஆணையரக ஆணையர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் செங்குன்றம் காவல் துணை ஆணையாளர் கே. மகேஸ்வரி, பெண்கள் பாதுகாப்பு, சட்ட விழிப்புணர்வு மற்றும் போதைப்பொருட்களின் தீமைகள் குறித்து மணலி திருத்தங்கல் நாடார் கல்லூரியின்மாணவிகளிடையேவிழிப்புணர்வுஏற்படுத்தும்வகையில்உரையாற்றினார்.தொடர்ந்து, அவர்களின் முன்னிலையில் கல்லூரி மாணவிகள் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனர். இதனைத் தொடர்ந்து, செங்குன்றம் “சிங்கப் பெண்” சிறப்புப் படையினர், பெண்களின் பாதுகாப்பு, தற்காப்பு முறைகள் மற்றும் அவசரகாலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாணவிகளுக்கு விரிவான விழிப்புணர்வு வழங்கி, தற்காப்பு செயல் விளக்கத்தையும் எடுத்துரைத்தனர்.இந்நிகழ்வில் மணலி காவல் நிலைய ஆய்வாளர், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர்..