fbpx
GeneralRETrending Nowஅரசியல்இந்தியா

கொரோனாவுக்கு எதிரான போர்..! ஒற்றுமையுடன் இந்தியா எதிர்கொள்வதாக அமித்ஷா பேச்சு!

Home minister amit sha about corona war

குர்கான்:

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா நல்ல நிலைமையில் இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

மத்திய ஆயுத போலீஸ் படைகள், நாடு முழுவதும் அலுவலக வளாகங்களில் இம்மாத இறுதிக்குள் ஒரு கோடியே 37 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளன. அதன்படி, அரியானா மாநிலம் குர்கானில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் பயிற்சி நிலைய வளாகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மரக்கன்று நட்டு வைத்தார்.

பின்னர், வர் பேசியதாவது: கொரோனா என்பது மிகப்பெரிய தொற்றுநோய். உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்கள் அதை எதிர்த்து போரிட்டு வருகின்றன. உலகளவில் எங்காவது கொரோனாவுக்கு எதிராக வெற்றிகரமான போர் நடக்கிறது என்றால், அது பிரதமர் மோடி தலைமையிலான இந்தியாவில்தான்.

இந்தியாவில் கூட்டாட்சி முறை இருப்பதாலும், 130 கோடி மக்கள்தொகை இருப்பதாலும் இந்த சவாலை இந்தியா எப்படி எதிர்கொள்ளும் என்று அஞ்சப்பட்டது. ஆனால், 130 கோடி மக்களும், அனைத்து மாநிலங்களும், ஒவ்வொரு தனிநபரும் ஒரே நாடாக இந்த போரில் பங்கேற்றனர்.

ஆகவே தான் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா நல்ல நிலைமையில் இருக்கிறது. இந்த போரை உறுதியுடனும், ஆர்வத்துடனும் தொடர்ந்து, கொரோனாவை தோற்கடிப்போம் என்றார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close