Others

செங்குன்றத்தில் நெல் அரிசி வணிகர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்— சிறப்பு செய்தி

அரிசி ஆலை உரிமையாளர்கள் தங்கள் ஒரு மாத உற்பத்தித் திறனைத் தாண்டி நெல் அல்லது அரிசியை இருப்பு வைக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவையும், மத்திய அரசு அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், பதுக்கலைத் தடுக்கவும் நாடு முழுவதும் அரிசி மற்றும் நெல் இருப்பு விவரங்களை வெளியிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், மாநிலங்களுக்கு இருப்பு வரம்பு விதிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தலைமை செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் ப.வெங்கட்ரமணன், உணவுத்துறை செயலாளர் பி.அமுதா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அரிசி விலை உயர்வு சம்பந்தமாக ஆலோசித்த விவரங்களை தெரிவிக்க தமிழ்நாடு அரிசி ஆலைஉரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் டி.துளசிங்கம் தலைமையில்செங்குன்றம்நெல்அரிசிவணிகர்சங்கதிருமணமண்டபத்தில்நடைபெற்றது.செங்குன்றம் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்கத் தலைவர் டி.கோபி அனைவரையும் வரவேற்றார்.சங்கச் செயலாளர் ஏ.லோகநாதன், துணைத்தலைவர் எம்.ஜெயபால், பொருளாளர் கே.என். குணசேகரன், இணைச் செயலாளர் ஆர்.நாகேந்திரன், ஜெ.பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சம்மேளன செயலாளர் டாக்டர் ஏ.சி. மோகன், அமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசித்த விவரங்களை எடுத்துரைத்தார். அரிசி ஆலை உரிமையாளர்கள் உற்பத்தி திறனையும், இருப்பு வைக்கும் விவரங்களையும் தெளிவாக கூறியதுடன், தாலுகா வாரியாக அரிசி விலை குறைந்துள்ளதை அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்த வேண்டுமென்றும், ஆந்திரா தெலுங்கானாவிலிருந்து 300 லாரிகள் மூலம் நெல் வந்துள்ளதை கூறினார். தமிழ்நாடு எப்பொழுதுமே நெல் பற்றாக்குறை மாநிலமாக இருந்தாலும் பொதுமக்களுக்கு அரிசி தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வேண்டுமென்பதில் தமிழக அரசு அறிவுறுத்துள்ளதையும், அரிசி விலை இன்னும் ஓரிரு வாரங்களில்குறையவாய்ப்புள்ளதையும் கூறினார்.சென்னை நகர நெல் அரிசி மொத்த வணிகர்கள் சங்கத் தலைவர் துரைராஜ், செயலாளர் பாலமுருகன், பொருளாளர் ரத்னகுமார் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல் மண்டி, அரிசி மண்டி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

 

Related Articles

Back to top button
Close
Close