Others
வைகோஅப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி..
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு இன்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிகிச்சைக்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். சளி பிரச்னை காரணமாக வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். விரைவில் சிகிச்சை முடித்து வைகோ வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.