மின்வாரியம்–தாழ்வழுத்த தொழில் நிறுவனங்களில் ஸ்மார்ட் மீட்டர்..

தமிழகத்தில் உள்ள 25 ஆயிரம் தாழ்வழுத்த தொழில் நிறுவனங்களில் ஸ்மார்ட் மீட்டரை பொருத்தும் திட்டத்தை செயல்படுத்த, மென்பொருள் உருவாக்கும் பணியில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது.தமிழகத்தில் உயர்அழுத்தப்பிரிவில்இடம்பெறும்11ஆயிரம்தொழிற்சாலைகளில் மட்டும் ஆளில்லாமல் கணக்கெடுக்கும் தானியங்கி மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மீட்டரில் மாதந்தோறும் கணக்கெடுக்கும் தேதி, மென்பொருள் வடிவில் பதிவேற்றம் செய்யப்பட்டு தொலைத் தொடர்பு வசதியுடன் அலுவலக சர்வரில் இணைக்கப்பட்டுள்ளது. மின்கணக்கெடுப்பு தேதி வந்ததும் தானாகவே கணக்கெடுத்து நுகர்வோருக்கு கட்டண விவரம்அனுப்பப்படுகிறது இதேபோல், தாழ்வழுத்தப் பிரிவில் இடம்பெறும் வீடு உள்ளிட்ட அனைத்து இணைப்புகளிலும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன. முதற்கட்டமாக, சென்னை, தி.நகரில் 1.42 லட்சம் வீடுகளின் மின் இணைப்புகளில் ஸ்மார்ட்மீட்டர்பொருத்தப்பட்டுள்ளது.இந்நிலையில்,தற்போதுதாழ்வழுத்ததொழிற்சாலைகளை உள்ளடக்கிய தொழில் நிறுவனங்களில் மொபைல் போன் செயலியில் கணக்கு எடுக்கப்படுகிறது.இதற்குப்பதிலாகஸ்மார்ட்மீட்டர்கள்பொருத்தப்படஉள்ளன.மொத்தம்உள்ள60ஆயிரம்தாழ்வழுத்ததொழில்நிறுவனங்களில்முதற்கட்டமாக25ஆயிரம்ஸ்மார்ட்மீட்டர்கள்பொருத்தப்படஉள்ளன.அந்தமீட்டரில்சிம்கார்டுபொருத்திஅலுவலகசர்வருடன்இணைக்கப்படஉள்ளது.இதற்காக,4ஜிஅலைவரிசையில் இயங்கும் வகையில் சிம்கார்டு வாங்கும் நடவடிக்கையில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது. மேலும், மின் கணக்கீட்டுக்கு மென்பொருளும் தயாரிக்கப்பட்டு வருகிறது. சிம்கார்டு மூலமாக கிடைக்கும் தொலைத் தொடர்பு சேவையைப் பயன்படுத்தி மாதந்தோறும் ஆளில்லா மின்பயன்பாடு கணக்கு எடுக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.