RETamil News
வேலூரில் நடத்தப்பட்டது பாரம்பரிய உணவு திருவிழா – வெளிநாட்டு மாணவர்களும் பங்கேற்பு

வேலூர் அரிட்டாபட்டியில் பாரம்பரிய உணவு திருவிழா நடத்தப்பட்டது. அந்த திருவிழாவில் அமெரிக்காவின் லைப் அமைப்பின் மாணவர்களும் கலந்துகொண்டனர். அதில் அவர்கள் கேப்பை, ரொட்டி, மீன்குழம்பு, புளியோதரை, முருங்கைக்கீரை, திணை பாயசம் , மொச்சை பயிறு வறுவல், எள்ளு துவையல் போன்ற பல்வேறு பாரம்பரிய உணவுகளை தயாரித்தனர். இதில் 10க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் ஏழுமலை பாதுகாப்பு செயலாளர் ரவிச்சந்திரன் தலைமைவகித்தார். இத்தகைய விழாவிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அந்த கிராம மக்கள் செய்து கொடுத்தனர். பிறகு களிஞ்சமலை கோயிலில் தியானம் செய்தவர்கள் தாங்கள் தயாரித்த பாரம்பரிய உணவை சாப்பிட்டனர்.















