fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

டெல்லி சுகாதார அமைச்சருக்கு கொரோனாவா..? மருத்துவமனையில் சேர்ப்பு!

Delhi health minister got corona symptoms

டெல்லி:

தலைநகர் டெல்லியில் சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த சில வாரங்களாக இந்தியாவில் உச்சத்தில் இருந்து வருகிறது.

தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை கடந்து வருகிறது.

மொத்த எண்ணிக்கை மூன்றரை லட்சத்தை நெருங்கி விட்டது. அது மட்டுமின்றி 10,000 பேர் வரை பலியாகி உள்ளனர்.

இந் நிலையில் டெல்லி  சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடும் காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் காரணமாக சேர்க்கப்பட்டு உள்ளார். இருப்பினும் சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா வைரஸ்  பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அதன் முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் ஒருவரே கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் உள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close