பாமக நிறுவனர் ச. ராமதாஸ் நான்தான் தலைவர் என்று திட்டவட்டம்…
திண்டிவனம் அடுத்த தைலாபுலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் ச. ராமதாஸ் கூறியதாவது: என் மூச்சிருக்கும் வரை பாட்டாளி மக்கள் கட்சிக்கு நான்தான் தலைவர். 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தலைவர் பதவியை அவருக்கு (அன்புமணி) கொடுக்கிறேன் என்று கூறியதற்கு பலரும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். கடைசி வரை நான்தான் பதவியில் இருக்க வேண்டும் என்று 99 சதவீதம் பேர் கூறுகின்றனர்.என் குடும்பத்தில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று நான் சொல்லிய வார்த்தையை, என்னால் காப்பாற்ற முடியவில்லை. தலித் எழில்மலை, பொன்னுசாமியின் செயல்பாடுகள் திருப்தி இல்லாததாலும், கட்சியின் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தியதாலும் மத்திய சுகாதாரத் துறைஅமைச்சராக35வயதில்அன்புமணியைநியமித்தேன்அந்தப்பதவியில்தாக்குப்பிடிக்கமு முடியாமல்,இரண்டரைஆண்டுகளில்அமைச்சரவையில்இருந்துவெளியேவந்துவிடுகிறேன் என்றார்அன்புமணி.அவரிடம்தினமும்பேசி,எப்படிஎல்லாம்செயல்படவேண்டும்என்றுஅறிவுறுத்தினேன். பின்னர், சுகாதாரத் துறையில் உலக அளவில் விருது வாங்கினார். ஆனால், தந்தையிடம்விருதுவாங்கமுடியவில்லை.பாமகஇளைஞரணித்தலைவர்பதவிக்குபொருத்தமானநபர்நியமிக்கப்படுவார். பொதுக்குழுக் கூட்டம் முறையாக கூட்டப்படும். அன்புமணிக்கு நல்ல தந்தையாக, வழிகாட்டியாக இருந்திருக்கிறேன். தாய், தந்தையை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். மைக் மற்றும் பாட்டிலை தூக்கி வீசியவர், தற்போது பெற்றோரை மகிழ்ச்சியாக வைத்திருப்பதாகக் கூறுகிறார். மாமல்லபுரம் மாநாட்டுக்குப் பிறகு, அன்புமணியின் செயல்பாடுகள் மோசமாகிவிட்டன.100 ஆண்டு இருப்பீர்கள் என்று கூறிவிட்டு, மார்பிலும், முதுகிலும் ஈட்டியால் குத்திக் கொண்டிருக்கிறார். தூக்க மாத்திரை போட்டால்கூட தூக்கம் வருவதில்லை. அந்த அளவுக்கு மன உளைச்சலும், வேதனையும் உள்ளது.அன்புமணியின்செயல்பாடுகளைநினைக்கும்போதுரத்தஅழுத்தம்அதிகரிக்கிறது. சுயம்புவாக பாட்டாளி மக்கள் கட்சியை உருவாக்கிய நான், தருமபுரிக்குச் சென்றபோது, மைக்வைத்துப் பேசக்கூடாது, கூட்டத்தில் 200 பேருக்கு மேல் இருக்கக் கூடாது என்றெல்லாம் அன்புமணி கட்டளையிட்டார். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
.