fbpx
RETamil NewsTrending Nowஇந்தியா

இன்று முதல் ரயில்களில் பயணிக்கலாம்….! ஆனா ஒரு கண்டிஷன்….!

Train services resumes after long-time

டெல்லி:  ஊரடங்கு உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் போக்குவரத்து, இன்று முதல் மீண்டும் துவங்குகிறது.

கிட்டத்தட்ட 40 நாட்களுக்கும் மேலாக இந்த ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. டெல்லி, சென்னை உட்பட, 15 பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கான வழிகாட்டி நடைமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

வெளிமாநிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், சொந்த மாநிலங்களுக்கு செல்ல ரயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. டெல்லியில் இருந்து, திப்ருகர், அகர்த்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்புர், ராஞ்சி, புவனேஸ்வர், செகந்திராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மாட்கோன், மும்பை, ஆமதாபாத் மற்றும் ஜம்மு தாவிக்கு இந்த ரயில்கள் இயக்கப்படும்.

அனைத்து ரயில் சேவைகளும் 2 மார்க்கங்களிலும் இயக்கப்படும். அதற்கான முன்பதிவு நேற்றே முடிந்துவிட்டது. துவங்கிய முதல் 3 மணி நேரத்திலேயே, 54,000 பயணிகளுக்கு 30,000 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது 10 கோடிக்கு டிக்கெட் விற்பனையாகி இருக்கிறது.

ரயிலில் பயணிக்கும் ஒவ்வொரு ரயில் பயணிகளும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பயணத்துக்கு முன் கொரோனா அறிகுறிகள் உள்ளதா என பரிசோதித்த பின் அனுமதி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Tags

Related Articles

Back to top button
Close
Close