fbpx
Others

ராணிப்பேட்டை–யார்? மாவட்ட செயலாளர் ஓட்டுநர் ரமேஷா? அடிமை பாபுவளவனா?

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட விசிகவில் நடப்பது என்ன? புலனாய்வு ரிப்போர்ட்!


தலைவர் தொல். திருமாவளவனின் கொள்கைக்காகவும், சாதி ஒழிப்பு மற்றும் சனநாயகப் பாதுகாப்பு போன்ற கட்சியின் கோட்பாடுகளைத் தீவிரமாகக் கடைப்பிடிப்பதிலும் தங்களின் உயிரையே தியாகம் செய்யத் துணியும் விசுவாசமான தொண்டர்கள் நிறைந்த பூமி ராணிப்பேட்டை மாவட்டம். ஆனால், தற்பொழுது ராணிப்பேட்டை மேற்கு மாவட்டத்தில் அரங்கேறி வரும் நிழல் உலகக் கூத்துகளும், லஞ்ச லாவண்யங்களும் ஒட்டுமொத்த விசிக தொண்டர்களையும் இரத்தக் கண்ணீர் வடிக்கவைத்துள்ளது.விசிகதலைவர்திருமாவளவனின் காரைஓட்டும்சாதாரணஓட்டுநரானதாழனூர்ரமேஷ்(என்றஅம்பேத்அரசு)மற்றும்அவரதுஅடிமையானதற்போதையமாவட்டச்செயலாளர்பாபுவளவன்ஆகியஇருவரின்கூட்டுக்கொள்ளையும்,அராஜகங்களும்எல்லைதாண்டிப்போய்க்கொண்டிருக்கின்றன.  ‘மெண்டல் டார்ச்சர்’ – முன்னாள் மாவட்டச் செயலாளரை தற்கொலை விளிம்பிற்கு தள்ளிய ரமேஷின் மாமூல் பட்டியல்!  நிர்வாக வசதிக்காக ராணிப்பேட்டை மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டபோது, மேற்கு மாவட்டத்தின் முதல் மாவட்டச் செயலாளராகப் பொறுப்பேற்ற பிரபு (என்ற பிரபாகரன்) கட்சிப் பணிகளையும் சமுதாயப் பணிகளையும் சிறப்பாகவே கொண்டு சென்றார். ஆனால், தலைவரின் ஓட்டுநர் என்ற செல்வாக்கை வைத்துக்கொண்டு தமிழகம் முழுவதும் கட்சிப் பதவிகளைப் பல ஆயிரங்களுக்கு வியாபாரம் செய்து வந்த இந்த ரமேஷின் கண், ராணிப்பேட்டை மேற்கு மாவட்டத்தின் மீது விழுந்தது. அதிகார போதையில் ஆடிய ரமேஷ், மாவட்டச் செயலாளர் பிரபுவுக்குக் கொடுத்த நிபந்தனைகளும் ‘மெண்டல் டார்ச்சர்களும்’ ஒரு தாதாவின் பாணியில் இருந்துள்ளன.  ரமேஷ் விதித்த பகல் கொள்ளை நிபந்தனைகள்:மாவட்டத்தில் புதிய பொறுப்பாளர்களிடம் பணம் வாங்கிரமேஷ் இடம் தர வேண்டும் வீட்டிற்குத் தேவையான கறி, மீன், பழங்கள் முதல் குடும்பத்தினர் சென்று வரக் கார்கள்வரைமாவட்டச்செயலாளர்தன்சொந்தச்செலவில்செய்துதரவேண்டும்.சென்னையிலிருந்து ரமேஷ் தாழனூர் கிராமத்திற்கு வரும்போதெல்லாம் சொகுசு கார் அனுப்பப்பட வேண்டும். அவர் சொகுசாக ஓய்வெடுக்க ஓட்டல்களில் குளிர்சாதன அறைகள், உயர்தர உணவுகள் மற்றும் மசாஜ் அவரே ஏற்பாடு செய்துகொள்வார்தான்சொன்னநபர்களுக்குத்தான் பதவி தர வேண்டும் என்று மிரட்டியும், கோஷ்டி மோதல்களை உருவாக்கியும் ரமேஷ் கொடுத்த கடுமையான மன உளைச்சலால், முன்னாள் மாவட்டச் செயலாளர் பிரபு வெளியில் யாரிடமும் சொல்ல முடியாமல், “தற்கொலை செய்து கொள்ளலாம்” என்ற இறுதி கட்ட மனநிலைக்குத் தள்ளப்பட்டார் என்றால், இந்த ரமேஷின் அராஜகம் எந்தளவுக்கு இருந்திருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள்! ‘2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிய நேரத்தில், பிரபு தன் பேச்சைக் கேட்கவில்லை என்ற கோபத்தில், தன் கைக்கூலிகளை வைத்துப் பொய்ப் புகார்களைத் தலைமைக்கு அனுப்பினார் ரமேஷ். அதன் விளைவாக, கலவை மாம்பாக்கத்தைச் சேர்ந்த அடிமை பாபுவளவனைக் கொண்டு வந்து மாவட்டச் செயலாளர் நாற்காலியில் அமர வைத்துள்ளார்.இந்தலச்சணத்தைப் பார்த்தால் ‘படையப்பா’ படத்தில் நடிகர் செந்திலுக்கு ரஜினிகாந்த் தன் ஆடையை மாற்றி அணிவித்து பெண் பார்க்க அழைத்துச் செல்லும்போது, பார்ப்பவர்களுக்கெல்லாம் “மாப்பிள்ளை இவர்தான், ஆனா இவர் போட்டிருக்கும் டிரஸ் என்னோடது” என்று நக்கல் அடிப்பது போல உள்ளது. இங்கு மாவட்டச் செயலாளர் என்ற போர்டு மட்டும்தான் அடிமை பாபுவளவனுக்கு, ஆனால் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் இயக்கும் ‘ஆக்டிங் மாவட்டச் செயலாளர்’ இந்த ஓட்டுநர் ரமேஷ்தான்!கட்சியின் கொள்கை, கோட்பாடு எதுவும் தெரியாத, கட்சி வளர்ச்சிக்காக உழைத்த பழைய நிர்வாகிகளை மதிக்கத் தெரியாத ஒரு கொத்தடிமையாகவே இந்த அடிமை பாபுவளவன் செயல்பட்டு வருகிறார். ரமேஷின் கட்டளைப்படி, பழைய முன்னாள் கட்சிக்காரர்களை திட்டமிட்டு அவமானப்படுத்தி ஒதுக்கிவிட்டு, லட்சக்கணக்கில் பணம் கொடுக்கும் நபர்களுக்கு மட்டுமே புதிய பதவிகளை வாரி வழங்கி வருகிறார்கள் இந்த ரமேஷ் –  27 லட்ச ரூபாய் தேர்தல் நிதி எங்கே? சுருட்டிய ரமேஷ் – பாபுவளவன் கூட்டணி!நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விசிக, திமுக கூட்டணியில் போட்டியிட்டபோது, தேர்தல் வேலைகளுக்காக வேட்பாளரிடமிருந்து சுமார் 27 இலட்ச ரூபாயைத் தேர்தல் நிதியாகப் பெற்றுள்ளார் பெற்றுள்ளார் இந்த அடிமை மாவட்டச் செயலாளர் பாபுவளவன்.ஆனால், தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய, நகரச் செயலாளர்களுக்குக் கையில் பிச்சைக் காசைப் போட்டுவிட்டு, பெரும் தொகையை ஓட்டுநர் ரமேஷும், அடிமை பாபுவளவனும் சேர்ந்து ஒட்டுமொத்தமாகச் சுருட்டி ‘ஆட்டையப்’ போட்டுவிட்டனர். பணம் வாங்கினார்களே விசுவாசமா வேலை செய்யணுமா இல்லையா ஆற்காடு தொகுதிக்கு உட்பட்ட எந்த இடத்திலும் இவர்கள் தேர்தல் பணியை முழுமையாக செய்யவில்லை என்பதே குற்றச்சாட்டாக உள்ளது இதனால் தேர்தல் களத்தில் நின்ற விசிக தொண்டர்கள் வேறு வழியில்லாமல், வேட்பாளர் முன்னிலையிலேயே பெரும் புலம்பலில் ஈடுபட்டது விசிக வட்டாரத்தில் அம்பலமாகியுள்ளது.லஞ்சம் கொடுத்து பதவி வாங்கிய ஆற்காடு கிழக்கு ஒன்றிய செயலாளர் சுகுமாரின் அநாகரிக மிரட்டல்!இவர்களின் ஊழலுக்கு மற்றொரு சாட்சிதான் ஆற்காடு கிழக்கு ஒன்றியச் செயலாளர் மாங்காடு சுகுமார். அண்மையில் கட்சியில் சேர்ந்த, இவர் விசிக கொள்கை ‘கோட்பாடுகள் தெரியாதவர் , அடிமை பாபுவளவன் மற்றும் ரமேஷுக்கு பல ஆயிரங்களை லஞ்சமாகக் கொட்டிக் கொடுத்துத்தான் இந்த ஒன்றியச் செயலாளர் பதவியைப் பெற்றுள்ளார். எப்பவுமே பிறந்தநாள் கொண்டாட சுகுமார் கட்சியில் பொறுப்பு வாங்கியதுடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் இந்த விழாவிற்கு ஆக்டிங் மாவட்டச் செயலாளர் ரமேஷும் அடிமை மாவட்ட செயலாளர் பாபு வளவனும் நேரில் சென்று வாழ்த்திருக்கிறார்கள் இப்படி இருக்கதேர்தல் பிரச்சாரத்தின்போது கிராமங்களுக்குச் சென்ற சுகுமார், நாகரிகமற்ற முறையில் நக்கல் நையாண்டியுடன் பேசியதோடு, முன்னாள் பொறுப்பாளர்களை உதாசீனப்படுத்தியுள்ளார் நான்தான் ஒன்றியச் செயலாளர், என்னை மீறி மாவட்டச் செயலாளரிடம் சென்றால் பதவியைப் பிடுங்கிவிடுவேன் எனப் பழைய நிர்வாகிகளை மிரட்டியுள்ளார். தேர்தல் பூத் செலவுக்கு வந்த பணத்தில், விசுவாசமான பழைய நிர்வாகிகளைத் தவிர்த்துவிட்டு, புதிய நபர்களுக்கு வெறும் 500, 1000 ரூபாயைக் கொடுத்துவிட்டு மொத்தப் பணத்தையும் சுகுமார் அமுக்கியுள்ளார். இந்த லஞ்சப் பேர்வழி சுகுமாரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனப் பல கிராம விசிகவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.கட்டப்பஞ்சாயத்து, மாமூல் பணம்… தாழனூரில் சொகுசு வீடுமாதந்தோறும் ஆற்காடு தொகுதியில் நடக்கும் கட்டப்பஞ்சாயத்துகள், ரியல் எஸ்டேட் மிரட்டல்கள், மாமூல் வசூல்கள் மற்றும் புதிய பதவிகள் மூலம் வரும் ‘கறுப்புப் பணம்’
அனைத்தையும் அடிமை பாபுவளவன் வசூல் செய்து அப்படியே ரமேஷிடம் ஒப்படைக்க வேண்டும். “வேறேதாவது பேசினால் அடுத்த மாவட்டச் செயலாளர் ரெடியாக இருக்கிறார்” என்று ரமேஷ் மிரட்டுவதால், அடிமை பாபுவளவனும் வாங்கிய பணத்தை ரமேஷிடம் கொடுத்துவிட்டு வாயை மூடிக்கொண்டு வருகிறார். மேலும் ரமேஷ் தமிழக முழுவதிலிருந்து வரும்இப்படி விசிக மாநில பொறுப்பாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் தொண்டர்களின் உழைப்பிலும், ரத்தத்திலும் நூதன கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு, ஓட்டுநர் ரமேஷ் தனது சொந்த ஊரான தாழனூரில் கோடிக்கணக்கில் சொகுசு வீடு கட்டியுள்ளார். பல்வேறு இடங்களில் பினாமி பெயர்களில் நிலங்களை வாங்கிப் போட்டுள்ளார். தனது பிள்ளைகளின் பெயர்களில் வங்கிகளில் பெரும் தொகையைத் டெபாசிட் செய்துள்ளார் என்பது விசிக தலைமை வட்டாரத்திலேயே தற்பொழுது பெரும் பேச்சாக மாறியுள்ளது.ராணிப்பேட்டை மாவட்டத்தின் மற்ற இரு மாவட்டச் செயலாளர்கள் ஜாம்பவான்களாக இருப்பதால் அங்கே ரமேஷின் ‘பாட்சா’ பலிப்பதில்லை. அதனால், ஆற்காடு பகுதியை மட்டும் குறிவைத்து, அடிமை பாபுவளவன் போன்றவர்களை வைத்துக்கொண்டு இந்த பகல் கொள்ளை நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.சொந்தக் கட்சியையும், மாவட்ட நிர்வாகத்தையும் சீரழிக்கும் ஓட்டுநர் ரமேஷ் மற்றும் அடிமை பாபுவளவனின் இந்த லஞ்ச லாவண்ய அட்டூழியங்கள், கட்சியின் சொத்தான விசிக தலைவர் தொல். திருமாவளவன் அவர்களுக்குத் தெரியுமா? அல்லது இவர்களின் நிழல் உலக ஆட்டத்தை மறைத்து தலைவரை ஏமாற்றுகிறார்களா?
உண்மைத் தொண்டர்களின் குமுறலையும், இந்த இமாலய ஊழலையும் இச்செய்தியின் மூலம் விசிக தலைமையின் பார்வைக்குக் கொண்டு செல்கிறோம். சனநாயகம் காக்கும் விசிக தலைமை, இந்த ஊழல் கூட்டணி மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்!    spl Repoter  M.Vijaya kumar

 

Related Articles

Back to top button
Close
Close