fbpx
Others

திருவாரூர்–ஒரு கோடி பனை நடும் பணியில் மூனாறு டூ முத்துப்பேட்டை வரை..!

திருவாரூர், செப்.30ஒரு கோடி பனை நடும் பணியில் மூனாறு டூ முத்துப்பேட்டை வரை பாமணி ஆற்றங்கரையில் ஒரு இலட்சம் பனை விதைகள் நடும் பணி தீவிரம்  ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணி கடந்த செப்டம்பர் 24-ல் மன்னார்குடியில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தொடங்கிவைத்தார். இதனை தொடர்ந்து டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் பனை விதைகள் நடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், தேசியப் படை மாணவர்கள் இப்பணியில் பேரெண்ணிக்கையில் பங்கேற்று பனை விதைகளை சேகரித்தல், விதைத்தல் போன்ற பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது நாட்டு நலப்பணித்திட்ட 10 நாட்கள் முகாம் கிராமங்களில் நடந்து வருகிறது. இங்கு மாணவர்கள் 50, 100 பேர்கள் அடங்கிய குழுக்களாக தங்கி இருந்து பனை விதைகளை நீர்நிலைகளில் நட்டு வருகின்றனர். நீடாமங்கலம் மூனாறு தலைப்பு முதல் முத்துப்பேட்டை வரை 60 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது பாமணி ஆறு. இந்த ஒரு ஆற்றில் மட்டும் ஒரு இலட்சம் பனை விதைகள் நடும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மன்னை நகர் முதல் புதுப்பாலம் வரை ஒரு கிலோ மீட்டர் தொலைவு கொண்ட பாமணி ஆற்றங்கரையில் பனை விதைகள் நடும் பொறுப்பை தாமாகவே முன்வந்து ஏற்றுள்ளது மன்னார்குடி இடையர் நத்தம் இந்தியன் ஆயில் கார்ப்பொரேசன் இண்டேன் பாட்லிங் பிளாண்ட் நிறுவனம்.நீடாமங்கலம் மூனாறு தலைப்பு முதல் நீடாமங்கலம் நகரம் வரை 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு பனை விதைகள் நடும் பொறுப்பை நீடாமங்கலம் மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணித்திட்டக்குழுமம் ஏற்றுக்கொண்டு தொடர்ந்து மூன்று நாட்களாக பனை விதைகளை விதைத்து வரும் மாணவர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.மன்னார்குடி கீழப்பாலத்திலிருந்து சேரன்குளம் வரை ரோட்டரி சங்கங்கள் பொறுப்பேற்று பனை விதைகளை விதைத்துவருகின்றனர்.முத்துப்பேட்டை,செம்படவன்காடு, பெருகவாழ்ந்தான் உள்ளிட்டப்பகுதிகளில்மாணவர்களுடன்வனத்துறையும்,நீர்வளத்துறையும் கைகோர்த்து பனை விதைகளை பாமணி ஆற்றின் கரை காப்பாளர்கள் (லஷ்கர்), நீர்வளத்துறைஉதவிபொறியாளர்கள்,வனவர்கள்,பனைவிதைகளைவிதைத்துவருகின்றனர்.  இது குறித்து ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணி ஒருங்கிணைப்பாளர்கள் கிரீன் நீடா மு.ராஜவேலு, கே.ஆர்.கே.ஜானகிராமன், எம்.ஏ.எஸ்.முகமது ரபீக் ஆகியோர்கூறுகையில், பாமணி ஆறு 60 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது. ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணிக்கான பனை பயணத்தை கடந்த ஜூன் மாதம் 7-ந் தேதி தொடங்கி பாமணி ஆற்றங்கரையில் பனை விதைகள் நடும் இடங்களை தேர்வு செய்தோம். பனை விதைகள் நடும் இடங்களை மன்னார்குடி நகராட்சி நிர்வாகம், வனத்துறை அதிகாரிகள், நீர்வளத்துறை அதிகாரிகள் தூய்மை செய்து கொடுத்தனர். இதனால் பாமணி ஆற்றில் பனை நடும் பணி இலகுவாக நடந்து வருகிறது. 60 கிலோ மீட்டர் தொலைவிற்கு பனை விதைகள் நடும் பணியை நிறுவனங்களும்,பொதுநலஅமைப்புகளும்போட்டிப்போட்டுக்கொண்டுபொறுப்பேற்றுக்கொள்கின்றனர். திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வி.மோகனசந்திரன் பள்ளி மாணவர்கள் மூலமாக பனை விதைகளை சேகரித்து அளித்துள்ளார்கள். இந்த பனை விதைகளை தான் நீர்நிலைகளில் விதைத்து வருகிறோம் என்றனர்.பட விளக்கம்: ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியில் நேற்று பாமணி ஆற்றங்கரையில் மன்னை நகர் முதல் புதுப்பாலம் வரை பனை விதைகளை நட்ட மாணவர்கள்.

Related Articles

Back to top button
Close
Close