உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆயிரத்தையும் தாண்டியது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகளையும் தாக்கியுள்ளது. இதில் ஐரோப்பிய நாடுகளில் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் பெரும் ஆபத்தாக விளங்குகிறது. எனினும் இதுவரை கொரோனா தொற்றுக்கு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த கொடிய தொற்று நோய்யானது மக்களுக்கு பரவுவதை கட்டுபடுத்தும் நடவடிக்கைகளில் ஒவ்வொரு நாடும் தீவிரம் காட்டி வருகின்றன. பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
எத்தகைய அளவிற்கு கவனமாக இருந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும் கொரோனா கிருமி பரவுவதை முழுமையாக கட்டுப்படுத்த முடியாததால் அனைத்து நாடுகளும் திக்கி திணறி வருகின்றன.

இதுவரை கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை உலக அளவில் 13 லட்சத்தையும் தாண்டியுள்ளது. இதே போல் பலியானவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.
அதிகபட்சமாக அமெரிக்காவில் மட்டும் 3.67 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதனால் அந்த நாடே செய்வது அறியாது திகைத்து உள்ளது.















