fbpx
Others

புஸ்ஸி ஆனந்த் வாயை திறந்தால் பிரச்சனை ஆகிவிடும்—விஜய் பதற்றம்..?

TVK Vijayதமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி வேண்டி இருந்தால்.. அது தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு தர்மசங்கடமான சூழ்நிலையை உருவாக்கும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கடந்த செப்டம்பர் 27 அன்று கரூர் மாவட்டத்தில் நடந்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக (TVK) பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரி, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.இந்த துயரச் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர். பலருக்குக் காயம் ஏற்பட்டது. இந்த மனு, வழக்கறிஞர்கள் டிக்ஸிதா கோஹில், பிரஞ்சல் அகர்வால், மற்றும் யாஷ் வி. விஜய் மூலம் தாக்கல் செய்யப்பட்டது. அக்டோபர் 3 அன்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் எஸ்.ஐ.டி அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. அந்த உத்தரவில், காவல் துறை ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்கப்பட்டு, சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. இதை கலைக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.இன்னொரு பக்கம் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எங்கே பதுங்கி இருக்கிறார் என்ற கேள்வி கடுமையாக நிலவி வருகிறது. இவரின் இருப்பிடம் தொடர்பாக உறுதிப்படுத்தப்படாத பல தகவல்கள் உலவி வருகின்றன. கரூர் சம்பவம் நடந்த அன்று திருச்சி பைபாஸில் அவரின் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. அதன்பின் அவர் போனை ஆன் செய்யவில்லை. அப்படியே தலைமறைவாகிவிட்டார். அங்கிருந்து அவர் ஏற்காடு சென்றதாக நிறைய தகவல்கள்கூறுகின்றன.அங்கேரிசார்ட்ஒன்றில்அவர்பதுங்கிஉள்ளதாககூறப்பட்டது.அதன்பிபிபின் அவர் வீரப்பன் வாழ்ந்த சத்தியமங்கலம் காட்டிற்கு ஓடிவிட்டார் என்று ஒரு பக்கம் கூறப்பட்டது. அவர் வங்கக்கடலில் கப்பல் ஒன்றில் பதுங்கி இருக்கிறார் என்றும் கூறப்பட்டது. இப்படி மாறி மாறி அவரின் இருப்பிடம் தொடர்பாக நிறைய தகவல்கள் பரவின. ஆனால் அவை எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. இவரின் இருப்பிடம் தொடர்பாக உறுதிப்படுத்தப்படாத பல தகவல்கள் உலவி வருகின்றன. புஸ்ஸி ஆனந்த் பெரும்பாலும் மதுரை அல்லது பெங்களூரில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.புஸ்ஸி ஆனந்த் வெளியே வந்தாலும் அவரை போலீசார் கைது செய்ய மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. அதாவது அவருக்கு எதிராக FIR இருந்தாலும் போலீசார் அவரிடம் விசாரணை செய்துவிட்டு விட வாய்ப்புகள் உள்ளன. ஆனால் புஸ்ஸி ஆனந்த வெளியே வராமல் இருக்க காரணம் உள்ளது. அவர் வெளியே வந்தால் போலீஸ் சில கேள்விகளை அவரிடம் கேட்கும்.  1. பேருந்து உள்ளே நடந்தது என்ன ? 2. விஜய்க்கு எச்சரிக்கை கொடுத்த பின் அதை ஏற்க மறுத்தது ஏன்? 3. கடைசி நேரத்தில் பேருந்து உள்ளே நீங்கள் எல்லாம் பேசியது என்ன? 4. இந்த விவகாரத்தில் வதந்தி பரப்பியது எப்படி? ஏன்? 5. கரூர் கூட்டத்திற்கு அண்டை மாவட்டத்தினர், கேரளா மக்கள் திரட்டப்பட்டது எப்படி? என்ற கேள்விகளை போலீஸ் கேட்கும். அப்படி கேட்கும் பட்சத்தில்.. அந்த கேள்விகள் விஜய்க்கு எதிராக மாறும். இது கிட்டத்தட்ட புஸ்ஸி ஆனந்த் அப்ரூவர் ஆனது போல ஆகிவிடும். அவர் வெளியே வந்து வாயை திறந்தால் பிரச்சனை ஆகிவிடும் என்று விஜய் தரப்பும், தவெக தரப்பு பதற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close