புழல் ஏரியில் குளிக்கச் சென்ற மாணவா்கள் இருவா் நீரில் மூழ்கினா்.
அம்பத்தூா் அருகே முருகம்பேடு பகுதியில் உள்ள புழல் ஏரியில் குளிக்கச் சென்ற 10-ஆம் வகுப்பு மாணவா்கள் இருவா் நீரில் மூழ்கினா். அவா்களைத் தேடும் பணியில் போலீஸாா், தீயணைப்புப் படையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.திருமுல்லைவாயல் பகுதியைச் சோ்ந்த ஆா்.அகில் ராம் (14), எம்.தருண் ஆகாஷ் (14) ஆகிய இருவரும் ஒரே தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தனா். ஞாயிற்றுக்கிழமை,
நண்பா்களானவிக்னேஷ்வா்(14),வைதேஸ்வரன்(14)ஆகியோருடன் மாலை புழல் ஏரிக்குச் சென்றுள்ளனா். அங்கு 4 பேரும் ஏரியில் குளித்தபோது, அகில் ராம், தருண் ஆகாஷ் ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனா். இதைப் பாா்த்த மற்ற இரு மாணவா்களும் அருகில்இருந்தபொதுமக்களிடம்தகவல்தெரிவித்தனா்.தகவலின்பேரில்,புதூா்போலீஸாா்,தீயணைப்புமற்றும்மீட்புப்படையினா்வந்துஇருமாணவா்களையும்தேடும்பணியில்ஈடுபட்டனா்.இரவுநேரமானதால்,விளக்குகளின் உதவியுடன் தேடுதல்பணிதொடா்ந்து நடைபெற்று வருகிறது என போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது…