Others
செங்குன்றத்தில் மனவளக்கலை மன்றம்.. சிறப்பு..செய்தி…!

செங்குன்றத்தில் மனவளக்கலை மன்றம் சார்பில் நடைபெற்ற மனைவி நல வேட்பு விழாவில் 75 தம்பதிகள் கலந்து கொண்டனர்.செங்குன்றம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சார்பில் அருள் அன்னை லோகாம்பாள் 108வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு செங்குன்றம் நெல் அரிசி வியாபாரிகள்சங்கதிருமணமண்டபத்தில்மனைவிநலவேட்புவிழாநடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பேராசிரியர் சௌமித்ரன் பேராசிரியை பொன்னி சௌமித்ரன் தம்பதியர்,வாழ்க்கை பாதையில் இன்ப துன்பங்களை சரிபாதியாக ஏற்றுக் கொண்டு கணவருக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் பல தியாகங்களை செய்து வாழும் தியாகத்தின் முழு உருவமாம் மனைவியரை சிறப்பிக்கும் விதத்தில் பெண்மையின் பெருமையை எடுத்துக் கூறி அவர்களின் திருமண நாளை நினைவில் நிறுத்தி செங்குன்றம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 75 தம்பதிகள் மாலை மாற்றி மனைவி நல வேட்பு விழா நடத்தினர். மேலும் தம்பதியர் தங்களின் குடும்ப வாழ்க்கைக்காக விட்டுக் கொடுத்தல், சகிப்புத்தன்மை, தியாகம் போன்றவை குறித்தும் நிகழ்ச்சியில் தம்பதியர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
