fbpx
Others

கடலின் நீர்மட்டம் கூடும்போது கடலோர பகுதிகளில் வேகமாக மூழ்கும் இந்திய நகரங்கள் …?

fastest sinking indian citiesமாறிவரும் சுற்றுசூழல் காரணமாக பூமி வெப்பமயமாதல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக அண்டார்டிகா பனி உருகி கடலின் நீர்மட்டம் வருடா வருடம் உயர்ந்துகொண்டே வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பூமி வெப்பமயம் ஆவதில் இருந்து தடுக்க வெவ்வேறு நாடுகள் பல முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும் அது முழுமையடைய இன்னும் பல நூறு வருடங்கள் எடுத்துக்கொள்ளும். கடலின் நீர்மட்டம் கூடும்போது கடலோர பகுதிகளில் அமைத்திருக்கும் நகரங்கள் ஒவ்வொன்றாக கடலுக்குள் மூழ்கும் அபாயம் உள்ளது. அந்த வகையில் இந்தியாவில் உள்ள நகரங்களில் எந்தெந்த நகரம் கடலில் வேகமாக மூழ்கிவருகிறது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை,fastest sinking indian cities வேகமாக மூழ்கும் நகரங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. சென்னையில் உள்ள தரமணி பகுதி ஆண்டிற்கு 3.5 சென்டிமீட்டர் அளவுக்கு வேகமாக கடலில் மூழ்கி வருவதாக கூறுகின்றனர்.  கடலுக்குள் வேகமாக மூழ்கும் இந்திய நகரங்களின் பட்டியலில் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் உள்ளது. ஆண்டுதோறும் 4.2 சென்டிமீட்டர் கடலுக்குள் மூழ்குவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நிலத்தடி நீரை அதிகளவு பயன்படுத்துவது, அதிகம் பொழியும் மழை இவை அனைத்தும் இந்நகரத்தை கடலில் மூழ்கடித்து வருகிறது.குஜராத்தில் உள்ள சூரத் நகரம் கடலில் வேகமாக மூழ்கி வரும் இந்திய நகரங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. சூரத்தில் உள்ள கரஞ்ச் என்ற பகுதி வேகமாக மூழ்கி வருகிறதாம். ஆண்டிற்கு 6 சென்டிமீட்டர் அளவிற்கு கடலில் மூழ்கி வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரானfastest sinking indian cities கொல்கத்தாவில் உள்ள சில பகுதிகள் கடலுக்குள் வேகமாக மூழ்கி வருகிறது. குறிப்பாக பாத்பரா என்ற பகுதி வேகமாக மூழ்கி வருவதாக கூறுகின்றனர். ஆண்டுதோறும் 2 சென்டிமீட்டர் அளவிற்கு கடலுக்குள் அப்பகுதி மூழ்கி வருகிறது.மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகர திகழ்வது மும்பை. திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானோர் இந்த நகரத்தில் தான் வசித்து வருகின்றனர். மும்பையில் உள்ள கிங்ஸ் சர்க்கிள் ரயில் நிலையம் பகுதி கடலுக்குள் வேகமாக மூழ்கி வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் மும்பை நகரம் வேகமாக மூழ்குவதிற்கான காரணமாக, அங்கு வானுயர் கட்டிகள் இருப்பது தான் என்றும் தெரிவிக்கின்றனர். ஆண்டிற்கு 2 சென்டிமீட்டருக்கும் அதிகமான அளவு கடலில் மூழ்கி வருகிறது. 

Related Articles

Back to top button
Close
Close