தேசிய பாடலை காங்கிரஸ் அவமதித்துவிட்டதாக விமர்சனங்கள்……?
அனைத்து மாநிலங்களிலும் நாட்டின் சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், தத்தம் கட்சி அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்.டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சுதந்திரதினம்கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர்சோனியாஆகியோர்கலந்துகொண்டனர்.அப்போது நாட்டின் தேசிய பாடலான வந்தே மாதரம்இசைக்கப்பட்டது.இந்தபாடல்முழுவதுமாகவே நிகழ்ச்சியில் இசைக்கப்பட்டது. பாடல் பாடப்பட்டுக் கொண்டு இருக்கும் போதே, சோனியா அதை நிறுத்துமாறு சைகை செய்தார். அருகில் நின்று கொண்டிருந்த கார்கே சில நொடிகள் பார்த்துவிட்டு தள்ளிநின்று கொண்டிருக்கும் ராகுலிடம் ஏதோ கூறுகிறார்.அடுத்த நொடியில் தம் பின்னால் நின்றிருக்கும் ஒருவரை அழைத்து ராகுல் ஏதோ சொல்ல, அடுத்த கணமே அந்த நபர், கார்கே அருகில் செல்கிறார். இதற்கு இடைபட்ட தருணத்தில் கார்கேவிடம் சோனியாசீரியசாகபேசுகிறார்.பாடல்முழுவதுமாகபாடப்படுவதைஅறிந்து,பொறுமையிழந்து சோனியா பேசியதை எல்லோரும் பார்க்கின்றனர். அதற்குள் ராகுல் சொல்லி அனுப்பிய நபரும் அங்கு வர இருவரும் அந்நபரிடம் பேசுகின்றனர்.இந்த காட்சிகள் அனைத்தும், வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து, தேசிய பாடலை காங்கிரஸ் அவமதித்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. என்ன பிரச்னை? வந்தே மாதரம் பாடலை பாடினால் சிறுபான்மையினரின் உணர்வுகள் புண்படும் என்று கருதி, காங்கிரஸ் கட்சி அதை எதிர்க்கிறது. பெயரளவுக்கு முதல் இரண்டு செய்யுள் பத்திகளை மட்டுமே பாடலாம் என்பது அந்த கட்சியின் நிலைப்பாடு. அதற்கு மாறாக, முழு பாடலையும் நிகழ்ச்சியில் பாடியதே, சோனியாவின் பதறலுக்கும்; கார்கே, ராகுல் அதிர்ச்சிக்கு காரணம் என்கின்றனர், கட்சியினர்.