fbpx
Others

சென்னையில் மீண்டும் தலைதுாக்கும் பைக் ரேஸ் கலாசாரம்—பொதுமக்கள் வேதனை

வடபழநியில்இருந்துகோயம்பேடு நோக்கி, நேற்று அதிகாலை 2:30 மணியளவில் குமார் என்பவர், மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் ‘ஹீரோ ஸ்பிளண்டர்’ பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.அரும்பாக்கம் மெட்ரோ நிலையம் அருகே, அதிவேகத்தில் பின்னால் வந்த ஒரு பைக், குமாரின் பைக்கில் உரசி சென்றது. இதில், நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில், குமார், அவரது மனைவிக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக குழந்தையும் சிறு காயத்துடன் தப்பியது.இந்த அதிர்ச்சியில் இருந்து அவர்கள் மீள்வதற்குள்,அடுத்தடுத்துநான்குபைக்குகளில் தலா இரு வாலிபர்கள் என எட்டு பேர் அதிவேகமாக சென்றனர். அப்போது தான் பைக் ரேசில் வாலிபர்கள் ஈடுபட்டது தெரிய வந்தது.ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள், வாலிபர்களை வாகனங்களில் துரத்தி சென்றனர். மேலும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே தடுப்புகளை அமைத்த போலீசார், பொதுமக்கள் உதவியுடன் பைக் ரேசில் ஈடுபட்டோரை மடக்கிப்பிடித்தனர்.அப்போது,பைக்கில்இருந்துதடுமாறிவிழுந்துசிலர்காயமடைந்தனர்.அவர்களிடமிருந்து ‘யமஹா ஆர்15, கே.டி.எம்., – டி.வி.எஸ்., அப்பாச்சி, பஜாஜ் டோமினார்’ உள்ளிட்ட ஐந்து சொகுசு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் ஒரு பைக், பதிவு எண் இல்லாமல் இயக்கப்பட்டது தெரியவந்தது. பிடிபட்ட 10 பேரையும் அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.விசாரணையில், தேனியைச் சேர்ந்த ஆதித்யா, 23, செங்கல்பட்டைச் சேர்ந்த ராகுல், 27, குமார், 28, செந்தமிழ்செல்வன், 20, மற்றும் விருகம்பாக்கம், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 16 முதல் 17 வயதுடைய ஆறு சிறுவர்கள் என தெரியவந்தது. சிறுவர்கள், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இவர்கள், ‘வாட்ஸாப்’ குழு வாயிலாக ஒன்றிணைந்து, வாகன ஓட்டிகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் பைக் ரேஸ் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக அரும்பாக்கம் 100 அடி சாலையை தேர்வு செய்து, அதிகாலை நேரத்தில் ரேசில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து, நான்கு இளைஞர்களையும் சிறையில் அடைத்த போலீசார், ஆறு சிறுவர்களை கெல்லீஸ் அரசுசிறார்மையத்தில்ஒப்படைத்தனர்.சென்னையில் மீண்டும் தலைதுாக்கும் பைக் ரேஸ் கலாசாரத்தைக் கட்டுப்படுத்த, போலீசார் கூடுதல் கண்காணிப்பு மற்றும் கடுமையான சோதனைகளை மேற்கொள்ளுமாறு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Related Articles

Back to top button
Close
Close