fbpx
Others

தேனிமாவட்டம் -ஆட்சியர் கவனத்திற்க்கு…?

பத்திரிகையாளர்களிடம்பாரபட்சம்காட்டும்PRO,APROசொந்தமாவட்டத்தில் பணிபுரியும் PRO நல்லதம்பி மற்றும் Apro மகாவிஷ்ணு ஆகிய இருவர் பணியிடை மாற்றம் செய்யப்படுவார்களா?

  • தேனிமாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் மத்தியில் நல்லதம்பி மற்றும் உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மகாவிஷ்ணு ஆகியோர் பத்திரிகையாளர்களிடையே பாரபட்சம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த நிருபர்களை புறக்கணிக்கும் வகையில் இவர்களது செயல்கள் உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தேனி மாவட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் தாங்கள் பணிபுரியும் பத்திரிகை நிறுவனத்தின் நிறுவன அங்கீகார கடிதங்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் அவர்களிடத்தில் கொடுத்து தங்கள் பணியாற்றி வரும் நாளிதழ்களுக்கு அரசு செய்திகள், விளம்பரங்கள் பெற்று செய்தித்தாள்களில் பிரசுரம் செய்து மாவட்ட வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்து வருகின்றனர்.தற்போது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருந்தே செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தில் இருந்து பத்திரிகையாளர்களுக்கு எந்த ஒரு பிரதிபலனும் கிடைப்பது இல்லை. குறிப்பாக PRO நல்லதம்பி மற்றும் APRO மஹா கிருஷ்ணன் ஆகியோர் பொறுப்பேற்றது.முதல் இன்று வரை பத்திரிகையாளர்களுக்கு எந்த ஒரு உதவிகளும் செய்து கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு இருந்து வருகின்றது.கடந்த தீபாவளி பண்டிகைக்கு பத்திரிகையாளர்களுக்கு ஒரு வாழ்த்து கூட சொல்லாத நிர்வாகமாக இந் நிர்வாகம் செயல்பட்டு வருகின்றது. மேலும் தங்களுக்கு அடிபணிந்து போகும் சிலருக்கு மட்டும் அரசு சலுகைகளை பெற்று தந்து அவர்களது பத்திரிகைகளுக்கு மட்டும் விளம்பரம் கொடுத்து அவற்றிற்குரிய கமிஷனை கேட்டு பெற்றுக் கொண்டு வருவதாக PRO மற்றும் APRO மீது அடுக்கடுக்கான குற்றச் சாட்டு அரங்கேறியுள்ளது.இந்நிலையில் PRO மற்றும் APRO ஆகியோர் பத்திரிகையாளர்களை தரம் பிரித்து பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாக தெரிகின்றது. அவ்வாறாக சமூக வலைதளமான whatsappல் அங்கீகரிக்கப்பட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் கீழ் தகவல் தெரிவிக்கும் வகையில் உள்ள வாட்ஸ் அப் குரூப்ல் ஒரு குறிப்பிட்ட நிருபர்களை மற்றும் வைத்துக் கொண்டு ஏனைய நிருபர்களை புறக்கணித்து புறந்தள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவை சம்பந்தமாக காரணம் கேட்டால் அந்தந்த பகுதியை சேர்ந்தவர்களை மட்டுமே தாலுகா வாரியாகwhatsappல்இணைத்துள்ளோம் என்று மழுப்பலான பதில் சொல்லி வருகின்றனர். இருப்பினும் பல்வேறு பகுதியை சார்ந்தவர்களும் ஏபிஆர்ஓ மஹா விஷ்ணு உருவாக்கியுள்ள சமூக வலைதளமான whatsapp தளத்தில்உள்ளனர். பத்திரிகையாளர்களை இவர் தரம் பிரித்து பார்ப்பதன் நோக்கம் என்னவென்று நிருபர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இவர்களது செய்கைகளால் நிருபர்களிடையே குழப்பம் நிலவி, உயர்ந்தவன். தாழ்ந்தவன என்ற பாகுபாடு நிலவி வருகின்றது. இவை ஒருபுறம் இருக்க பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக ஒவ்வொரு அரசு விழா மற்றும் அமைச்சர் பெருமக்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் பத்திரிகையாளர்கள் பெயரைச் சொல்லி கவர்களைப் பெற்றுக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.செய்தி சேகரிப்பில் ஈடுபடும் பத்திரிகையாளர்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்யாமல் அவற்றை தாங்களாகவே வைத்துக் கொண்டு.. விசயம் தெரிந்த பத்திரிகையாளர்களர்களிடம் அலுவலக தேவைக்காக நாங்கள் பெற்றுள்ளோம். உங்களுக்கு தேவையானதை நீங்கள் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று நிருபர்களை தூண்டிவிடுகின்றனர்கடந்த காலங்களை நிருபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் தங்களுக்கு சேர வேண்டியதுபணம்கிடைக்காது என கருதி நிருபர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் PRO, மற்றும் APRO ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. முறையாக நிறுவன அங்கீகாரம் கொடுத்த பத்திரிகையாளர்களுக்கு குறைந்தபட்சமாக இருசக்கர வாகன ஓட்டு வில்லையை கூட வழங்க முன்வருவது கிடையாது என்ற குற்றச்சாட்டும் இவர்கள் மீது எழுந்துள்ளது.   மேலும் மாவட்டத்தில் சுமார் 70 நபர்களுக்கு மேலாக பஸ் பாஸ் கொடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இவற்றிலும் முறைகேடு நடந்துள்ளதாக தெரிகின்றது. எந்தெந்த பத்திரிகைகளுக்காக பஸ் பாஸ் கொடுத்துள்ளனர் என்ற விவரம் கூட தெரியாமல் உள்ளது. ஒரு சில பத்திரிகைகளுக்கு அரசு சார்ந்த விளம்பரங்களை வழங்கி விளம்பர தொகையில் 20% முதல் 50% வரை கமிஷன் பெற்று ஆதாயம் அடைந்து வருவதாக ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் விளம்பரத்திற்காக போதிய கமிஷன்பணத்தை பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட சில பத்திரிகைகளுக்கு மட்டுமே விளம்பரங்கள் வழங்கி வருகின்றனர்.இதனால் சிறு பத்திரிகைகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்ந்து விளம்பரங்கள் மற்றும் சலுகைகள் வழங்குவதில்லை என குற்றச்சாட்டு உள்ளது. PRO நல்லதம்பி மற்றும் APRO மஹா விஷ்ணு ஆகியோர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த நிருபர்களிடம்PRO நல்ல தம்பி மீது எந்த ஒரு புகார் சென்றாலும் அவற்றிற்கு நடவடிக்கை மேற்கொள்ளும் இடத்தில் உள்ள துறையின் இணை இயக்குநர் அவர்கள் இவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு துணிச்சலாக நடவடிக்கை மேற்கொள்வாரா? சொந்த மாவட்டத்தைச் சார்ந்த நபரான PRO நல்ல தம்பி பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பணியிடை மாற்றம் செய்யப் படுவாரா? PRO நல்லதம்பி மற்றும் உதவிசெய்திமக்கள்தொடர்புஅலுவலர்மகாவிஷ்ணுஆகியோர்தங்களைதிருத்திக்கொண்டு  பத்திரிகையாளர்கள்மத்தியில்பாரபட்சம்காட்டாமல்,அனைத்துபத்திரிகையாளர்களையும் சமமாக கருதிட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.      தங்களது ஆதிக்கத்தை காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர்கள் சாதிய கண்ணோட்டத்தோடு பத்திரிகையாளர்களை பார்த்து வருவதாகவும் அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ளன. மாவட்டத்தில் பத்திரிகையாளர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. அரசு நிகழ்ச்சிகள், அமைச்சர் பெருமக்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகள் மாவட்ட செய்திகள் இவை அனைத்தையும் தெரிந்து கொள்வதில் சுணக்கும் ஏற்பட்டுள்ளது.சமூக வலைதளங்களான பேஸ்புக் ல் District Collector Theni பக்கத்தில் 16.12.2023க்கு பிறகு எந்த ஒரு அப்டேட்டும் செய்யப்படவில்லை. Xtni Collector, இன்ஸ்டாகிராம்,X தளங்களிலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு சார்ந்த செய்தி வெளியீடுகள் வெளியிடப்படாமல் அவை கேள்விக்குறியாக உள்ளது. மாதம் ஒன்றுக்கு PRO அலுவலக வாகனத்திற்கு மாதந்தோறும் அரசு வழங்கும் 125 லிட்டர் டீசல் போடுவதிலும் போலி பில்கள் மட்டுமே கணக்கில் காட்டப்படுகின்றன. தற்போது APRO ஆரம்பித்துள்ள வாட்ஸ் அப் குரூப்பில் மாதாந்திர இதழ்கள், மற்றும் பருவ இதழ்களில் பணியாற்றி வரும் நிருபர்களை இணைத்து அரசு, மற்றும், அரசு அலுவலர்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு எதிரான செய்திகளை வழங்கி அரசுமற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்திவருகின்றனர்.பணம் படைத்தோர்கள், மில் உரிமையாளர்கள்,    கல்வி நிறுவனம் சார்ந்தோர்கள், குவாரி நடத்துவோர்,ஜவுளி நிறுவனத்தார்களிடம் இவர்கள் நிருபர்கள்லிஸ்ட்களை கொடுத்து மொத்தமாக ஆதாயம் பார்த்துவருகின்றனர். கால சூழலில் மேற்கண்டநபர்கள்நிறுவனங்கள் மீது நிருபர்கள் எதிர்மறையான செய்திகள்வெளியிடும் போது PRO அலுவலகத்தின் கீழ் கொடுக்கப்பட்ட பத்திகையாளர்களது போன் நம்பருடன் கூடிய லிஸ்ட் மூலம் பத்திரிகையாளர்களை அடையாளம் கண்டு தாக்குதலுக்கு ஆளாக்கும் வேலையை செய்து வருகின்றனர். எதேச்சதிகார போக்கை கடைபிடித்து வருதாக PRO மற்றும் APRO மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  கடந்த காலங்களில் கோவையில் பணியாற்றிய காலகட்டங்களில் பல்வேறு ஊழல் புகார்களுக்கு ஆளாகி விசாரணை வளையத்தில் இருக்கும் PRO நல்லதம்பி, தனது அண்ணணும் துறையின் உதவி இயக்குநருமான திரு.அண்ணா அவர்களின் பெயரை கெடுக்காமல், PRO நல்ல தம்பி மீது எந்த ஒரு புகார் சென்றாலும் அவற்றிற்கு நடவடிக்கை மேற்கொள்ளும் இடத்தில் உள்ள துறையின் இணை இயக்குநர் அவர்கள் இவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு துணிச்சலாக நடவடிக்கை மேற்கொள்வாரா? சொந்த மாவட்டத்தைச் சார்ந்த நபரான PRO நல்ல தம்பி பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பணியிடை மாற்றம் செய்யப் படுவாரா? PRO நல்லதம்பி மற்றும் உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மகாவிஷ்ணுஆகியோர்தங்களைதிருத்திக்கொண்டுபத்திரிகையாளர்கள்மத்தியில்பாரபட்சம்காட்டாமல்,அனைத்துபத்திரிகையாளர்களையும்சமமாக கருதிட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.பத்திரிகையாளர்கள் மத்தியில் பார்க்கப்படும் சாதிய பாகுபாட்டை PRO நல்லதம்பியும் APRO மஹா கிருஷ்ணனும் தவிர்ப்பார்களா? சிறு பத்திரிகை யாளர்களுக்கும் அரசு விளம்பரங்கள் மற்றும் சலுகைகள் வழங்கிட முன்வர வேண்டும். இல்லையென்றால் தமிழக முதல்வருக்கும் தமிழக செய்தி மற்றும் ஊடகத்துறை தலைமை செயலாளருக்கும் தேனி மாவட்ட ஆட்சி இருக்கும் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் சார்பாக இந்த இரு நபர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து பத்திரிக்கையாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளும் கிடைக்கும் வரை தொடர் செய்திகளும், போராட்டங்களும் தொடரும் என பாதிக்கப்பட்ட செய்தியாளர்கள் சார்பாக எச்சரிக்கை வேண்டுகோள் விடுக்கின்றோம்.

 

 

Related Articles

Back to top button
Close
Close