ஊரடங்கு நீட்டிப்பா?முக்கிய முடிவு எடுக்கும் எடப்பாடி!
Chief minister edapaddi palanisamy discussion

சென்னை: கொரோனா வைரஸ் தொடர்பாக சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
3ம் கட்ட ஊரடங்கு முடிய இன்னும் 3 நாட்களே உள்ளது. அதே நேரத்தில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, மாநில அரசுகளின் பரிந்துரைப்படி 4ம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்படும். இதுதொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மே 18ம் தேதிக்கு முன் வெளியிடப்படும் என்றார்.
ஊரடங்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
தற்போது இருக்கும் நிலையில், ஊரடங்கை நீட்டிக்கலாமா? தளர்த்தலாமா? என்று கருத்துகளை கேட்டறிந்தார். கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.















