fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

ஸாரி கேட்டார் கட்சியில சேர்த்துக்கிட்டோம்.. ஓ.ராஜா குறித்து ஜெயக்குமார் காமெடி கருத்து!!

சென்னை : செய்த தவறுக்கு நேரிலும், கடிதம் மூலமாகவும் வருத்தம் தெரிவித்த காரணத்தால் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா சில நாட்களுக்கு முன்பு அதிரடியாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். மணல் கொள்ளை, அரசு ஒப்பந்த பணிகளில் தலையீடு, டிடிவி தினகரனிடம் காட்டிய நெருக்கம் காரணமாகவே அவர் கட்டம் கட்டப்பட்டார் என்று தகவல்கள் வெளியாகியது.

ஆனால், நீக்கப்பட்ட ஒரே வாரத்தில்  ஓ. ராஜா தற்போது அதிமுகவில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதிமுகவின் இந்த நடவடிக்கை அனைவரிடையே பெருத்த ஆச்சரியத்தையும் வியப்பையும்  ஏற்படுத்தியது.

இந் நிலையில், செய்த தவறுக்கு நேரிலும், கடிதம் மூலமாகவும் வருத்தம் தெரிவித்த காரணத்தால் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் இதை தெரிவித்தார். இதுகுறித்து ஜெயக்குமார் கூறுகையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.ராஜா, தான் செய்த தவறுக்கு நேரிலும், கடிதம் மூலமாகவும் வருத்தம் தெரிவித்த காரணத்தால் அவர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார்.

மறப்போம், மன்னிப்போம் என்ற அடிப்படையிலேயே இணைத்துள்ளோம். இது சசிகலா, தினகரன் குடும்பத்தார் தவிர்த்து அனைவருக்கும் பொருந்தும்.

இனி அதிமுக வில் யார் தவறு செய்தாலும் சாரி சொன்னால் போதும்.

Related Articles

Back to top button
Close
Close