தங்கஅங்கி அய்யப்பனுக்கு அணிவித்து ஊர்வலம்…
சபரிமலைஅய்யப்பன் கோவில் கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது
இதுவரை 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்துள்ளனர். கடந்த வருடத்தைவிடஇதேநாளில்5லட்சம்பேர்சபரிமலைக்குஅதிகமாகவந்துள்ளதாகதிருவிதாங்கூர்தேவஸ்தானநிர்வாகம்தெரிவித்துள்ளது.இந்தநிலையில் நடப்பு சீசனின் சிகர நிகழ்ச்சியாக மண்டல பூஜை வருகிற 27-ந்தேதிநடக்கிறது.இதையொட்டி அய்யப்பனுக்குஅணிவிக்கப்படும் தங்க அங்கி இன்று(செவ்வாய்க்கிழமை) ஆரன்முளா பார்த்த சாரதி கோவிலில் இருந்து ஊர்வலமாக சபரிமலைக்கு புறப்படுகிறது.26-ந் தேதி மாலை 6.30 மணிக்கு தங்க அங்கி சன்னிதானம் வந்து சேரும். இதனை தொடர்ந்து அந்த தங்க அங்கி அய்யப்பனுக்கு அணிவித்து தீபாராதனை நடைபெறும்.மறுநாள் காலை 10.10-11.30 இடையே மண்டல பூஜை, வழிபாடு நடைபெறும். அன்றைய தினம்தங்கஅங்கிஅலங்காரத்தில் அய்யப்பன் பக்தர்களுக்கு காட்சிஅளிக்கிறார்.இரவு11மணிக்குகோவில்நடைஅடைக்கப்படும். அத்துடன் மண்டல சீசன் நிறைவடைகிறது. பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக 30-ந் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும்சபரிமலை கோவில் நடை திறக்கப்படும். முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக மகரஜோதி தரிசனம் அடுத்த மாதம் 14-ந் தேதி நடைபெறும்.ஜோதி வடிவில் அய்யப்பன் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அத்துடன் மகரவிளக்கு பூஜை நிறைவு பெறுகிறது..