fbpx
Others

அரசி​யல் கட்சி தலை​வர்​கள்​ பலர்​ நயி​னார்​ நாகேந்​திரனுக்​கு கண்​டனம்​….

நயி​னார் நாகேந்​திரன் அமைச்​சர் செங்​கோட்​டையன்: நயி​னார் நாகேந்​திரன் எங்​கிருந்​து, எப்​படி பேசுகிறார் என்று என்​னால் புரிந்​து​கொள்ள முடிகிறது. அவர் இருக்​கும் இடம் படிப்​படி​யாகத் தேய்ந்து வருகிறது. அமைச்​சர் ராஜ்மோகன்: பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், ஒரு அரசி​யல் தலை​வரைப் போல பேசாமல் தெரு​முனைப் பேச்​சாளரை போல் பேசி​யுள்​ளார். திமுக​வினர் போல பாஜக​வினரும் அவதூறாக பேசி வரு​கின்​றனர்.தமிழக காங்​கிரஸ் தலை​வர் மாணிக்​கம் தாகூர்: அரசி​யல் விரக்​தி​யின் உச்​சத்​தில் முதல்​வர் விஜய் மற்​றும் அவரது தாயார்ஆகியோரை நயி​னார் நாகேந்​திரன் இழி​வாகப் பேசி​யிருப்​பதுகண்​டிக்​கத்​தக்​கது. தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன்: பொறுப்​புள்ள தலை​வர்​கள் பொறுப்​பற்ற முறை​யிலே பேசுவதுஏற்​புடையதல்ல.  .அமைச்​சர் வன்​னியரசு: பெண்​களுக்கு எதி​ரான வெறுப்​பும், அவதூறும்​தான் பாஜக​வினர் பேசும் அரசி​யலின் அடிப்​படை. நயி​னார் நாகேந்​திரன் தனது அநாகரி​க​மான பேச்​சுக்கு மன்​னிப்பு கேட்க வேண்​டும்.பாஜக மாநில துணை தலை​வர் குஷ்பு: தமிழக முதல்​வரின் தாயார் குறித்து பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​யுள்ள தரக்​குறை​வான கருத்து அரு​வருப்​பானது. நீங்​கள் இந்த உலகத்​துக்கு வந்​ததே ஒரு பெண்​ணால், ஒரு தாயால் என்​பதை நினை​வில் கொள்​ளுங்​கள்.மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லாளர் பெ.சண்முகம்: பெண்​களை மதிப்​பது பாஜக​வின் அகரா​தி​யிலேயே இல்​லாத விஷ​யம் என்​பது அனை​வருக்​கும் தெரி​யும். நயி​னார் நாகேந்​திரனுக்கு நாவடக்​கம் தேவை. தவெக செய்தி தொடர்​பாளர் மு.சவுந்தர ராஜா: அரசி​யலில் இருப்​பவர்​கள் தங்​களது வார்த்​தைகளுக்​கும் செயல்​களுக்​கும் பொறுப்​புடன் இருக்க வேண்​டும். கொள்​கைகளை விமர்​சிக்​கலாம். ஆட்​சி​யின் செயல்​பாடு​களை கேள்வி கேட்​கலாம். ஆனால், குடும்​பத்தை அரசி​யல் விமர்​சனத்​துக்​குள் இழுப்​பது ஒரு​போதும் ஆரோக்​கிய​மான ஜனநாயகத்​துக்கு அழகல்ல.இதே​போல், அரசி​யல் கட்சி தலை​வர்​கள்​ பலர்​ நயி​னார்​ நாகேந்​திரனுக்​கு கண்​டனம்​ தெரி​வித்​துள்​ளனர்​…

Related Articles

Back to top button
Close
Close