fbpx
Others

மறைந்த டியுஜே மாநில தலைவர் பி எஸ் டி புருஷோத்தமன் –சிறப்பு செய்தி

மறைந்த டியுஜே மாநில தலைவர் பி எஸ் டி புருஷோத்தமன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு   அரசியல் கட்சி பிரமுகர்கள் – மூத்த பத்திரிகையாளர்கள் பங்கேற்பு  சென்னையில் நடைபெற்ற மறைந்த தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் மாநிலத் தலைவர் பிஎஸ்டி புருஷோத்தமன் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும்மூத்தபத்திரிகையாளர்கள்பங்கேற்றனர்.தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் சார்பில் நடைபெற்ற மறைந்த சங்கத் தலைவர் பி எஸ்டி புருஷோத்தமன் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு வடசென்னை சிஐடியு அலுவலகம் எ பி நினைவரங்கத்தில் நடைபெற்றது.புதியதாக தேர்வு செய்யப்பட்ட தமிழ்நாடு யூடியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் சங்கத் தலைவர் சாம்பியன் கே முத்து தலைமை தாங்கினார்.மாநில நிர்வாகிகள் துணைத் தலைவர்கள் திருச்சி ஆர். வளையாபதி, ஏ தமிழ்ச்செல்வன், மைக்கேல் ஜார்ஜ், பொதுச் செயலாளர்கள் போளூர் சுரேஷ், வேலங்கன், பொருளாளர் வி ரவிச்சந்திரன், துணை பொது செயலாளர்கள் ஆர் முருகக்கனி, எஸ் பி லட்சுமணன, பி நடராஜன், அமைப்புச் செயலாளர்கள் தி ராஜேந்திர குமார், ம தனஞ்செயன், இணைச் செயலாளர்கள் தர்மபுரி ஜி லெனின், வேலூர் சரவணன், திருச்சி போஸ் சரவணன் ஆகியோர் மற்றும் மறைந்த பிஎஸ்டி புருஷோத்தமன் அவர்களின் துணைவியார் வி கிருஷ்ணவேணி, மற்றும் அவரது மகள் பி பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மறைந்த டியுஜெ மாநிலத் தலைவர் பி எஸ் டி புருஷோத்தமன் திருவுருவப் படத்தினை மூத்த பத்திரிகையாளர் அ குமரேசன் திறந்து வைத்தார்.பின்னர் கலந்து கொண்ட அனைவரும் மலரஞ்சலி செலுத்தினர்.நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழக தலைமை செய்தி தொடர்பாளர் டி.கே. எஸ். இளங்கோவன்,   மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம்,இந்தியகம்யூனிஸ்ட்கட்சிமாநிலசெயலாளர்மு.வீரபாண்டியன்,ஆம் ஆத்மி கட்சியின் தலைவர். வசீகரன்மற்றும் மத்திய சென்னை இந்திய தொழிற்சங்க மையத் துணைத் தலைவர். எம். வி. கிருஷ்ணன், மெட்ராஸ் யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் தலைவர். வை. செல்வின் வினோத்குமார், பொருளாளர். ஜோசப் ராஜ், சி. யு. ஜே. பொதுச்செயலாளர். சபீர் அகமது, தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத் தலைவர். ஏ. ஜெ. சகாயராஜ், தமிழ்நாடு மீடியா கேமராமேன் அசோசியேஷன். பொருளாளர் சிங்காரவேலன், தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட நிபுணர்கள் சங்க செயலாளர் எல். சீனிவாசன் மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள் டி வீராசாமி, வி மதியழகன், டி. ரமேஷ், பி. ஆறுமுகம், எம். ராஜ்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மறைந்த தலைவருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.டி.யு.ஜெ சங்கநிர்வாகிகள்சென்னைமாவட்டசெயலாளர்தேவேந்திரன்,பொருளாளர்அப்சர்பாஷா,துணைத்தலைவர்கள் ஜெயராஜ், முனைவர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர் வாணி சிவப்பிரகாஷ், திருவள்ளூர் மாவட்டதலைவர் கோவிந்தராஜ், செயலாளர் ரூபன், வேலூர் மாவட்ட செயலாளர். அழகேச பாண்டியன், பொருளாளர். இளஞ்செழியன், தர்ம்புரி மாவட்ட தலைவர் விஸ்வநாதன், பொருளாளர் முத்தமிழன், திருச்சி மாவட்டத் தலைவர் சுகுமார், திருவண்ணாமலை மாவட்ட பொருளாளர் சாலமன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சென்னை மாவட்டத்தலைவர் ம.மீ.ஜாபர் நன்றி கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close