Others
பந்தா போஸ்டர், பேனர் இல்லாம ஒர் அரசு விழா– அமைச்சர் நிர்மல்குமார்
தமிழக மக்களின் அன்பை பெற்ற முதல்வர் விஜய் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை மதுரையில் துவங்கியது சந்தோஷமாக உள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போதே மதுரைக்கு அழைத்து வர முயற்சி செய்தோம். ஆனால் மாநாடு மதுரை புறநகர் பகுதியில் தான் நடந்தது. மதுரைக்கு முதல்வராக மீண்டும் வருவது மகிழ்ச்சி. முதல்வர் கலந்து கொள்ளும் அரசு நிகழ்ச்சியில் எங்குமே ஒரு பேனர் கூட இல்லை.மதுரை மாவட்டத்தில் 8 த.வெ.க., எம்.எல்.ஏ.,க்கள் இருக்கின்றனர். ஆனாலும் மதுரை விமான நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனை வரை 16 கி.மீ., துாரத்திற்கு முதல்வர் வரும் வழியில் எங்குமே போஸ்டர், பேனர் இல்லை. இதற்கு முன் மக்கள் முகம் சுளிக்கும் வண்ணம் பேனர்கள் வைத்தனர். மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நிர்மல் குமார் கூறினார்.