தூத்துக்குடி காவல் மாவட்டம்—சிறப்பு செய்தி
தூத்துக்குடி காவல் மாவட்டம், விளாத்திகுளம் உட்கோட்ட காவல் சங்கரலிங்கபுரம் காவல் நிலைய எல்லைகைக்குட் பட்ட குற்ற நிகழ்விடத்தில் கடந்த 23.08.2026 அன்று பிற்பகல் 02 .45 மணிக்கு அரசு போக்கு வரத்து கழகத்தில் நடத்துனராக பணி செய்து கொண்டு இருந்த கணேஷ் குமார் என்பவரிடம் எதிர் மனுதாரர்கள் தன்னை கெட்ட வார்த்தைகள் பேசி பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்து சென்ற குற்ற சம்பவம் சம்பந்தமாக சங்கரலிங்கபுரம் காவல் நிலையத்தில் பாதிக்கப் பட்ட அரசு பேருந்து நடத்துனர் நேரில் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகார் மனு விற்கு இன்று வரை 27.09. 2026 .கிட்ட தட்ட ஒரு மாத காலமாகியும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய படவில்லை . வழக்கிற்கான தகுந்த முகாந்திரம் இருந்தபோதும் FIR பதிவு செய்ய மறுத்து வேண்டுமென்றே கால தாமதம் செய்வதில் வேறு எதாவது சிறப்பு காரணம் உண்டா?
