திமுகவை சாடும் அமைச்சர் நிர்மல் குமார்…..
சென்னை தலைமை செயலக வளாகத்தில் நிருபர்களிடம் அமைச்சர் நிர்மல் குமார் கூறியதாவது: நீதிமன்றம் கொடுத்த 45 நாட்களுக்கு வழக்கை முடிக்க முடியாவிட்டால் கூடுதல் அவகாசம் தானே கேட்க வேண்டும். நீதிமன்றத்திற்கு சென்று விசாரணைக்கு மேலும் இரண்டு மாதங்கள் அவகாசம் வேண்டும் என்று கேட்டு வாங்கி இருக்க வேண்டும். அதை செய்யாமல் வழக்கை முடித்துக்கொள்வதற்கான இறுதி அறிக்கையை சமர்பித்தது ஏன்? வீடியோ தெளிவாக இல்லை என ரகுபதி கூறுகிறார்.இதற்கு ரகுபதி பதில் சொல்லியே ஆக வேண்டும். வீடியோவை இவரே பார்த்தாரா? அல்லது பார்த்தவர்கள்இவரிடம்சொன்னார்களா? ஆதாரம் அப்பொழுதே ரெக்கார்டு ஆனதால் இது தப்பித்தது. இல்லையென்றால் ஆதாரத்தை அவர்கள் அப்பொழுதே அழித்து இருப்பார்கள். வீரமணி பாலியல் வழக்கு போன்ற இத்தகைய மோசமான வழக்குகளிலிருந்து ஒருவரை தப்பிக்கச் செய்யக்கூடிய வேலையை திமுகவை போன்ற கேடுகெட்ட கட்சியால் தான் செய்ய முடியும்.வீரமணி பாலியல் வழக்காக இருந்தாலும் சரி, சிறிய வழக்காக இருந்தாலும் சரி, நீங்கள் எத்தனை வழக்குகளை முடித்து வைத்திருப்பீர்கள். இதுதான் உங்களது ஆட்சி காலத்தில் குற்ற சம்பவங்கள் எண்ணிக்கை குறைவு என்று சொல்லும் லட்சணம் இதுதானா? எப்ஐஆர் பதிவு செய்வது விட்டு, பேரம் பேசுவதையெல்லாம் முடித்துவிட்டு முடித்து வைப்பது தான் உங்களது வேலையா? இன்னும் வீரமணியை காப்பாற்றும் வேலையை பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.கச்சத்தீவு பிரச்னை, காவிரி நதிநீர், சர்க்காரியா கமிஷனில் உள்ள தவறை சொன்னால், திமுகவினர் ஓவர் ரியாக்ட் செய்கிறார்கள்; இப்படி செய்தாலே தவறு இருக்கிறது என்று தான் அர்த்தம். அவர்கள் மீது உள்ள தவறுகள் எல்லாம் தெரிந்து விடும் என்று இவ்வாறு செய்கின்றனர். திமுகவினர் எதை மூடிமறைக்க இவ்வாறு செய்கின்றனர்? இவ்வாறு அமைச்சர்நிர்மல் குமார் கூறினார்.