தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் சரக டி.எஸ்.பி., எஸ். காயத்ரி (37) காத்திருப்போர் பட்டியல்
தஞ்சாவூர் அருகே, வல்லம் சரக டி.எஸ்.பி.,யாக, 2025ம் டிசம்பரில் காயத்ரி பொறுப்பேற்றார். இவர் கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர்/டிசம்பர் மாதத்தில் வல்லம் சரக டி.எஸ்.பி.-யாகப் பொறுப்பேற்றார் இவர், தன் பகுதியில் நடைபெறும் செம்மண்கடத்தலை தடுக்க தவறியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான புகார் தலைமைக்கு சென்றது.இதற்கிடையில், விவசாயிகள் போராட்டத்தின் போது, அவர்களை டி.எஸ்.பி., காயத்ரி ஒருமையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அடுத்துடன், கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வரும் பொதுமக்களை முறையாக கையாளுவதில்லைஎன்றகுற்றச்சாட்டுகள்எழுந்தது.இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக, காயத்ரியை சென்னைக்கு வரவழைத்து விசாரணை நடத்திய, தமிழக டி.ஜி.பி., மகேஷ் குமார் அகர்வால், காயத்ரியை காத்திருப்போர் பட்டியலில் வைக்க நேற்று முன்தினம்உத்தரவிட்டார்.தஞ்சாவூர், தெற்கு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சுதா,48,தன்னிடம்வரும்புகார்மனுக்களைமுறையாகவிசாரிக்காமல்,காலம்தாழ்த்தியதாகவும், கலெக்டர் குடியிருப்பு எதிரே பொருள்காட்சி நடத்த முறையான விசாரணையின்றி அனுமதி அளித்ததாக, மத்திய மண்டல ஐ.ஜி., பாலகிருஷ்ணனுக்கு புகார் சென்றது. இதையடுத்து, சுதாவை காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிட்டார்.