fbpx
Others

சென்னை மாநகராட்சி கூட்டத்திற்கு கருப்பு உடையில் வந்த மேயர் பிரியா…?

சென்னை மாநகராட்சியை கைப்பற்றிய திமுக கூட்டணி

ரீல்ஸ் பார்த்து வாக்களித்த மக்கள் இப்போ வருத்தப்படுறாங்க.. தவெகவை சாடிய சென்னை மேயர் பிரியா! | Mayor Priya: Voters Regret Choosing TVK After Watching Reels, Chennai Mayor ...சென்னை மாநகராட்சி கூட்டம், மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, தி.மு.க., மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் அக்கட்சி கவுன்சிலர்கள், கருப்பு உடை அணிந்து பங்கேற்றனர்.நிதி நெருக்கடி காரணமான கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதி, ஒப்பந்ததாரர்களுக்கான நிலுவை தொகை வழங்கப்படாமல் உள்ளது. இதை கண்டித்தும், மாநகராட்சிக்கு அவசர கால நிதி விடுவிக்காத தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இவ்வாறு கருப்பு உடையில் வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.நிதி விடுவிக்காதது தொடர்பாக, கவன ஈர்ப்பு தீர்மானத்தையும் தி.மு.க.,வினர் கொண்டு வந்தனர். இதற்கு, த.வெ.க., கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், வி.சி.க-கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., ஆகிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. அதேபோல், பா.ஜ., – அ.தி.மு.க.,வும் ஆதரவு அளித்தன.கவன ஈர்ப்பு தீர்மானத்தில் துணை மேயர் மகேஷ்குமார் பேசியதாவது: எம்.எல்.ஏ.,க்களுக்கு கார் வசதி, கூடுதல்நிதிஒதுக்குவதுபோல்,மாநகராட்சியின் 200 வார்டு கவுன்சிலர்களுக்கும் வார்டு மேம்பாட்டு நிதியை இம்மாதமே விடுவிக்க வேண்டும். நிதி இல்லாததால், கவுன்சிலர்களால் மக்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்ற முடியவில்லை.மாநகராட்சி பணிகள்முடிந்துஆறுமாதங்கள்கடந்தும்,ஒப்பந்ததாரர்களுக்கான தொகை விடுவிக்கப்படாமல்உள்ளது.மழைக்காலத்திற்குள் சாலை மற்றும் மழைநீர் வடிகால் பணிகளைவிரைந்துமுடிக்கவசதியாக,நிலுவைதொகையைஉடனேவிடுவிக்கவேண்டும்.துாய்மை பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் மதிய உணவு வருவதில்லை; தர மும் சுவையும் குறைவாக உள்ளது. எனவே, உணவு வழங்குவதற்கு பதிலாக தினசரி, 100 ரூபாய் உணவு படியாக வழங்க வேண்டும்.சென்னை மாநகரின் வளர்ச்சிக்கு ஏற்ப கட்டடங்களின் உயர வரம்பை, 20 மீட்டராக உயர்த்த வேண்டும். கவுன்சிலர்களுக்கு 50,000 ரூபாய் செலவின தொகை வழங்குவதுடன், துணை மேயர், நிலைக்குழு தலைவர்களுக்கும் கார் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Articles

Back to top button
Close
Close