கோவை – வால்பாறையில் மத்திய பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு…
கோவை மாவட்டம் – வால்பாறையில் மத்திய பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு
கோவை மாவட்டம் வால்பாறை நகரில், 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று மத்திய துணை ராணுவப் படையினரின் (CAPF) அணிவகுப்பு (Flag March) சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றது.தேர்தல் காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும் வகையில் இந்த
அணிவகுப்பு நடத்தப்பட்டது. வால்பாறை நகரின் முக்கிய சாலைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் திரளும் பகுதிகளில் மத்திய பாதுகாப்பு படையினர் அணிவகுத்துச் சென்று பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.இந்த அணிவகுப்பில், ஆயுதங்களுடன் முழு பாதுகாப்பு உபகரணங்களுடன் இருந்த மத்திய பாதுகாப்பு படையினர், ஒழுங்காக அணிவகுத்து நகரின் பல பகுதிகள் வழியாகச் சென்றனர். அவர்கள் சென்ற இடங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து நம்பிக்கை அடைந்து, தேர்தல் நேரத்தில் எந்த வித அச்சமும் இல்லாமல் வாக்களிக்கலாம் என்ற உறுதி கிடைத்தது.மேலும், தேர்தல் தொடர்பான சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாதவாறு காவல்துறை மற்றும் மத்திய படையினர் இணைந்து தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். வால்பாறை பகுதியில் தேர்தல் நடைபெறும் வரை இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த அணிவகுப்பு மூலம் வால்பாறை மக்களிடையே பாதுகாப்புஉணர்வுஅதிகரித்ததுடன்,அமைதியானமற்றும்சீரியதேர்தல்நடைபெறுவதற்கானமுன்னேற்பாடுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. கோவை மாவட்ட புகைபட கலைஞர் ஜெயப்ரகாஷ் தே