கனமழை காரணமாக சத்தியமங்கலம் அருகே தரைப்பாலம் சேதம்….
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே பெய்த கனமழை காரணமாக தரைப்பாலம் சேதமடைந்ததால் இன்று காலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வெள்ளநீர் வடிந்ததைத் தொடர்ந்துதற்போதுமீண்டும்போக்குவரத்துதொடங்கியுள்ளது.சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் நேற்று இரவு பரவலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக வனப்பகுதியில் இருந்து பெருக்கெடுத்து வந்த மழைநீர், மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள ஐயன்தாலை கிராமம் அருகே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரைப்பாலத்தின் வழியாகப் பெருக்கெடுத்து ஓடியது.இந்தப் பகுதியில் ஏற்கனவே புதிய உயர்மட்டப் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, அதன் அருகே தற்காலிகமாக தரைப்பாலம் அமைக்கப்பட்டு, அதன் வழியாக வாகனப்போக்குவரத்து நடைபெற்று வந்தது.இந்நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணி முதல் தொடர்ந்து பெய்த கனமழையால் வாய்க்கால்புதூர் வனப்பகுதியில் இருந்து பெருக்கெடுத்து வந்த வெள்ளநீர் தரைப்பாலத்தைச் சேதப்படுத்தியது. இதனால் இன்று காலை 6 மணி முதல் சுமார் 10 மணி வரைஅந்தவழியாகவாகனங்கள்செல்லமுடியாமல்போக்குவரத்துமுற்றிலும்பாதிக்கப்பட்டது.இதன் காரணமாக அவ்வழியாகச் சென்ற வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை
ஏற்பட்டது. தொடர்ந்து மழைநீர் வடிந்து வெள்ளப்பெருக்கு குறைந்ததைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் வாகனப் போக்குவரத்து தொடங்கியுள்ளது.ஏற்கனவே இந்தப் பகுதியில் உயர்மட்டப் பாலம் கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில், தற்காலிக தரைப்பாலம் மழை வெள்ளத்தால் சேதமடைந்த சம்பவம் வாகன ஓட்டிகளிடையே சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தியமங்கலம் அருகே அய்யன் சாலை பகுதியில் புதிதாக பாலம் கட்டப்பட்டு வரும் நிலையில், அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தரைமட்ட பாலம் வெள்ளநீரில் மூழ்கியது. இதன் காரணமாக சத்தியமங்கலம் – பவானிசாகர் இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் விடிய விடிய கனமழை பெய்தது.சிமிட்டஹள்ளிகிராமத்திலிருந்து பைனாபுரம் செல்லும் சாலையில் வேரோடு மரம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் தலமலை செல்லும் சாலையில் உள்ள ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது