Others

உயிரைப் பணயம் வைத்து கடத்தல்காரர்களைப் பிடித்த காவலருக்கு முதல்வர்விஜய் பாராட்டு..

குட்கா கடத்தல்காரர்களின் கார் மீது தொற்றியபடி சென்ற கோவை தலைமைக் காவலர் வேல்முருகனை, முதல்வர் விஜய் நேரில் அழைத்துப் பாராட்டிப் பரிசு வழங்கினார். உடன் தமிழக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால். கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கார் அசுர வேகத்தில் பறந்தது. நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சோதனைச் சாவடியில் இருந்த சக போலீஸார் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட போலீஸாரை உஷார்படுத்தினர். காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் குறைவாக இருந்ததால் கார் வேகமாக சென்றது.மேலும்விளாங்குறிச்சி, கணியூர் சுங்கச்சாவடிகளிலும் நிற்காமல் சென்றதுஇதையடுத்து அவிநாசி போலீஸாருக்கு கோவை போலீஸார் தகவல் அளித்தனர். அவர்கள் முன்னெச்சரிக்கையாகத் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மற்ற வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து நெரிசலை செயற்கையாக உண்டாக்கினர். அப்போது காரில் வந்த கும்பல், போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. இதையடுத்து காரை நிறுத்திவிட்டு 3 பேரும் இறங்கி ஓட முயன்றனர்.அவர்களைஅங்குகாத்துக்கொண்டிருந்தபோலீஸார்சுற்றிவளைத்துபிடித்தனர்.காரில் மேல் பகுதியில் குற்றவாளி களைத் துணிச்சலாகப் பிடிக்க முயன்ற தலைமைக் காவலர் வேல்முருகனையும் மீட்டனர். தொடர்ந்து 3 பேரிடம் போலீஸார் விசாரித்தபோது , அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து புகையிலைப் பொருட்களைக் கடத்தி வந்து கோவையில்விற்பனைசெய்யமுயன்றதும் கண்டறியப்பட்டது.உயிரைப் பணயம் வைத்து கடத்தல்காரர்களைப் பிடிக்கக் காரணமாக இருந்த தலைமைக் காவலர் வேல்முருகனை,முதல்வர்விஜய்நேற்றுதலைமைச்செயலகத்துக்கு நேரில் அழைத்துப் பாராட்டினார். அவருக்குப் பரிசு வழங்கி கவுரவித்த முதல்வர், பணியின் போது கவனமாகவும் பாதுகாப்பாகவும் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இந்நிகழ்வின் போது டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உடனிருந்தார். இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close