fbpx
Others

இந்தியாவுக்கே முன்னுரிமை கொள்கை—பிரதமர் பெருமிதம்….

pmspeechtamil | இந்திய பிரதமர்.ராஜஸ்தானில் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு பலோத்ரா மாவட்டத்தில் உள்ள பச்சபத்ரா என்ற இடத்துக்கு நேற்று வந்த பிரதமர் மோடி, அங்கு நடந்த நிகழ்ச்சியில், நாட்டின் முதல் பசுமை மண்டல ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு மற்றும்பெட்ரோகெமிக்கல்வளாகத்தைதிறந்துவைத்தார்.தொடர்ந்து,ராஜஸ்தான்அரசுப்பணிகளில்தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார். விழாவில், ராஜஸ்தான் கவர்னர் ஹரிபாபு பாகடே, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, முதல்வர் பஜன்லால் சர்மா ஆகியோர் பங்கேற்றனர். மத்திய அரசுநாட்டின்நலன்களைபாதுகாப்பதோடு,தடையற்றஎரிபொருள்வினியோகத்தைஉறுதிசெய்துள்ளது.’இந்தியாவுக்கே முன்னுரிமை’ என்ற கொள்கையில் நாங்கள் உறுதியாக இருந்தோம். உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் போது, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படாததற்குஎங்களதுதுாதரகநடவடிக்கைகளேகாரணம்.உலகம்முழுதும்டீசல்விலை,40சதவீதம்வரைஉயர்ந்திருந்தாலும், நம் நாட்டில் பெட்ரோல், டீசல் வினியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட நாங்கள் அனுமதிக்கவில்லை. எனினும்,இதுபற்றிஎதிர்க்கட்சிகள்வதந்திபரப்பின.ஆனால்அவைவெற்றிபெறவில்லை.உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ததுடன், 40-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு நம் நாடு எரிபொருளை ஏற்றுமதி செய்துள்ளது. உலகளாவிய வினியோகத் தொடர் பாதிக்கப்பட்டிருந்தாலும், சமையல் எரிவாயு தடையின்றி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்தது.சர்வதேச விலை நிலவரப்படி, சமையல் காஸ் சிலிண்டர் ஒன்றின் விலை, 2,000 ரூபாய் வரை உயர்ந்திருக்க வாய்ப்பிருந்தது. ஆனால் நாங்கள், 950- ரூபாய்க்கு வழங்கினோம். ‘உஜ்வாலா’ திட்டத்தின் மூலம் ஏழை மக்களுக்கு இலவச சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதி செய்தோம்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Related Articles

Back to top button
Close
Close