fbpx
Others

மாதவரம் எம்.எல்.ஏ. விஜயாபிரபு ரூ. 3.68 லட்சம் கல்விஊக்கதொகைவழங்கினார்….!!

செங்குன்றம்நெல், அரிசி வணிகர்கள் சங்கம் சார்பில் அரசுபள்ளி மாணவர்களுக்கு ரூ. 3.68 லட்சம் கல்விஊக்கதொகை ! மாதவரம் எம்.எல்.ஏ. விஜயாபிரபு வழங்கினார் !!

செங்குன்றம் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் சங்க மண்டபத்தில் நடந்த விழாவில் செங்குன்றம் சுற்று பகுதியில் உள்ள 9 அரசு பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகையும், பெற்றோர்களை இழந்த மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகையும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகையும் மொத்தம் 3 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சங்கத் தலைவர்.டி. கோபி தலைமை தாங்கினார் சங்க செயலாளர்.ஏ. லோகநாதன், பொருளாளர். கே. என். குணசேகரன் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எம். எல். விஜய் பிரபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்க தொகைகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர். துளசிங்கம், செயலாளர். டாக்டர். மோகன், மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு)வி.லிங்கேஸ்வரன்,டாக்டர்.கோபாலகிருஷ்ணன், வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி துணைத் தலைவர். சக்தி உட்பட பலர்கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close