fbpx
Others

லஞ்ச ஒழிப்​புத்​ துறை இயக்​குநரும், கூடு​தல் டிஜிபி​யு​மான அருண்– சோதனை நடவடிக்​கை…

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக அருண் ஐபிஎஸ் நியமனம்பொது​மக்​களுக்கு வழங்​கப்​படும் அரசு சேவை​களுக்கு நிர்​ண​யிக்​கப் ​பட்ட கட்​ட​ணங்​களை மட்​டுமே வசூலிக்க வேண்​டும் என்ற விதிமுறை இருந்​தா​லும், சில அலு​வல​கங்​களில் பல்​வேறு சேவை​களுக்கு லஞ்​சம் கேட்​கப்​படு​வ​தாக தொடர்ந்து புகார்​கள் எழுந்து வந்​தன. குறிப்​பாக, கட்​டிட வரைபட அனு​ம​தி, சொத்து வரி பெயர் மாற்​றம், வரி மதிப்​பீடு மாற்​றம், குடிநீர் மற்​றும் பாதாள சாக்​கடை இணைப்​பு, தொழில் உரிமம் வழங்​குதல் மற்​றும் புதுப்​பித்​தல், பிறப்பு – இறப்பு பதிவு​களில் திருத்​தம், ஆக்​கிரமிப்பு தொடர்​பான நடவடிக்​கைகள், அரசு ஒப்​பந்​தப் பணி​களுக்​கான பில் ஒப்​புதல், சாலை, வடி​கால், தெரு​விளக்கு உள்​ளிட்ட வளர்ச்​சிப் பணி​களுக்​கான ஒப்​பந்​தங்​கள், அரசு வீடு திட்ட பயனாளி​கள் ஒப்​புதல், சுயஉதவிக் குழு திட்​டங்​கள், கிராம பஞ்​சா​யத்து நிர்​வாக அனு​ம​தி​கள், அரசு நலத்​திட்​டங்​களில் பெயர் சேர்த்​தல் உள்​ளிட்ட பணி​களுக்கு லஞ்​சம் பெறப்​படு​வ​தாக குற்​றச்​சாட்​டு​கள் எழுந்​தன.பணம் கொடுக்​காதவர்​களின் கோப்​பு​கள் வேண்​டும் என்றே தாமதம் செய்​யப்​படு​வ​தாக​வும், சில நேரங்​களில் காரணமின்றி நிராகரிக்​கப்​படு​வ​தாக​வும் ​மக்​கள் புகார் தெரி​வித்​தனர்.இந்த புகார்​கள் தொடர்​பாக லஞ்ச ஒழிப்​புத்​ துறை இயக்​குநரும், கூடு​தல் டிஜிபி​யு​மான அருண், மாநிலம் முழு​வதும் ஒருங்​கிணைந்த சோதனை நடத்த உத்​தர​விட்​டார். இதையடுத்து 50-க்​கும் மேற்​பட்ட தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டன. நாள் முழுக்க வசூலாகும் தொகை மாலை நேரத்​தில் அதி​காரி​களிடம் அதி​கம் இருக்​கும் என்​ப​தால், நேற்று அலு​வல​கப் பணி முடி​யும் நேரத்​தில் திடீரென போலீ​ஸார் சோதனை​யில் ஈடு​பட்​டனர்.தமிழகம் முழு​வதும் மாநக​ராட்​சி, நகராட்​சி, வட்​டார வளர்ச்சி அலு​வல​கங்​கள் என 41 இடங்களில் இந்த சோதனை ஒரே நேரத்​தில் நடை​பெற்​றது. சென்னையில் கோடம்பாக்கம், திருவிக நகர், தேனாம்பேட்டை, அண்ணா நகர், ராயபுரம், பெருங்குடி ஆகிய 6 மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது திருச்சி மாநக​ராட்சி 4-வது மண்டல அலு​வல​கம், கோவை மாநக​ராட்சி மத்​திய மண்டல அலு​வல​கம், தாம்​பரம், புதுக்​கோட்​டை, கரூர், கும்​பகோணம், திருநெல்​வேலி, தூத்​துக்​குடி, திரு​வண்​ணா​மலை, காரைக்​குடி மாநக​ராட்​சிகள், மயி​லாடு​துறை, திரு​வாரூர், நாகப்​பட்​டினம், அரியலூர், தென்​காசி, கன்​னி​யாகுமரி, தரு​மபுரி, திருச்​செங்​கோடு, பேரணாம்​பட்​டு, திருப்​பத்​தூர், வாலாஜா, போடி, ராம​நாத​புரம், கள்​ளக்​குறிச்​சி, திருத்​தணி நகராட்​சிகள், தாடிக்​கொம்​பு, ஊத்​துக்​குளி, கடலூர் – மேல்​பட்​டாம்​பாக்​கம் பேரூ​ராட்​சிகள் உள்​ளிட்ட பல இடங்​களில் சோதனை நடை​பெற்​றது. பல அலு​வல​கங்​களில் இரவு வரை சோதனை நீடித்​தது.தூத்​துக்​குடி மாநக​ராட்சி அலு​வல​கத்​தில் இருந்து ரூ.7.50 லட்​சம், திருநெல்​வேலி மாநக​ராட்சி அலு​வல​கத்​தில் ரூ.97,600, தென்​காசி நகராட்சி அலு​வல​கத்​தில் ரூ.43,160 கைப்​பற்​றப்​பட்​டன. ராஜ​பாளை​யம் நகராட்சி அலு​வல​கத்​தில் நகரமைப்பு ஆய்​வாளர் காளீஸ்​வரி​யிடம் இருந்து ரூ.2 ஆயிர​மும், ஓய்வு பெற்ற அலு​வலக உதவி​யாளர் பாண்​டியனிடம் இருந்து ரூ.4 ஆயிர​மும் பறி​முதல் செய்​யப்​பட்​டதாக கூறப்படுகிறது.சோதனை​யின்போது பல அலு​வல​கங்​களில் கணக்​கில் வராத ரொக்​கப் பணம் மட்​டுமின்​றி, ‘ஜி-பே’ உள்​ளிட்ட டிஜிட்​டல் முறை​களில் பணம் பரி​மாறப்​பட்​டதற்​கான ஆதா​ரங்​களும் கைப்​பற்​றப்​பட்​டுள்​ளன.மதுரை மாவட்​டம் திரு​மங்​கலம் வட்​டார வளர்ச்சி அலு​வல​கத்​தில் நடந்த சோதனை​யில், பெண் பொறி​யாளரின் வங்​கிக் கணக்​குக்கு ‘ஜி-பே’ மூலம் வந்​த​தாக கூறப்​படும் ரூ.1.50 லட்​சம் பரிவர்த்​தனை தொடர்​பான தகவல்​கள் கண்​டறியப்​பட்​டன. அங்​கிருந்த பிற ஊழியர்​களிடம் இருந்து ரூ.23,500 ரொக்​கம் பறி​முதல் செய்​யப்​பட்​டது.செல்​போன்​கள், வங்கி பரிவர்த்​தனை விவரங்​கள், கணக்கு புத்​தகங்​கள் மற்​றும் முக்​கிய ஆவணங்​களை​யும் லஞ்ச ஒழிப்​புத்​துறை அதி​காரி​கள் ஆய்வு செய்து வரு​கின்​றனர். நேற்று நடத்தப்பட்ட சோதனையில் ரூ.31.21 லட்சம், ‘ஜி-பே’ பரிவர்த்தனை மூலம் ரூ.26.71 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.பறி​முதல் செய்​யப்​பட்ட பணத்​துக்​கான உரிய ஆவணங்​கள், பணம் பெற்​றதற்​கான காரணம், டிஜிட்​டல் பரிவர்த்​தனை​களின் தன்மை குறித்து அதி​காரி​களிடம் தொடர்ந்து விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது. இந்த சோதனை​யின் அடிப்​படை​யில், முறை​கேடுகள் உறுதி செய்​யப்​பட்​டால் சம்​பந்​தப்​பட்ட அதி​காரிகள், ஊழியர்​கள் மீது அடுத்​தகட்ட சட்ட நடவடிக்​கை எடுக்​கப்​படும்​ என்​று லஞ்​ச ஒழிப்​புத்​ துறை வட்​டாரங்​கள்​ தெரிவித்​தன.

Related Articles

Back to top button
Close
Close