இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு—மத்திய அரசு அறிவிப்பு…
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027க்கான பணி ஜூலை 17 முதல் 31 வரை சுய கணக்கெடுப்பு முறையில் நடந்தது. இதன் தொடர்ச்சியாக கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மூலம் வீடுகள் தோறும் கணக்கெடுப்பு பணியானது ஆக.,1 (இன்று) முதல் 30 வரை வரை நடக்கிறது.மாநிலத்தின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும், வலுவான கொள்கைகளை உருவாக்கவும், திட்டமிடுதலுக்கும் இந்த துல்லியமான தரவு சேகரிப்புமிகமுக்கியமானது.இந்த கணக்கெடுப்பில் வீடுகளின் நிலை, குடிநீர், மின்சாரம், இணைய வசதி, சமையல் எரிபொருள், கழிப்பிடம், கணினி போன்ற வசதிகளுடன் வீட்டின் உரிமை, குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை, உட்கொள்ளும் உணவு, வாகனங்கள், அலைபேசி உள்ளிட்ட 33 கேள்விகள் கேட்கப்படும்.கணக்கெடுப்பாளர்கள் அலைபேசி செயலிகள் மூலம் தரவுகள் சேகரிக்கப்படும். அதே சமயத்தில் தனிப்பட்ட தரவுகள் பாதுகாக்கப்படுவதும் உறுதி செய்யப்படும். அனைத்து பொதுமக்களும்வீடுகள்பட்டியல்மற்றும்வீட்டுவசதிகணக்கெடுப்புப் பணியின் போது கணக்கெடுப்பாளர்களின் கேள்விகளுக்கு சரியான விவரங்களை வழங்கி தங்களது முழு ஒத்துழைப்பைவழங்க வேண்டும்.இந்த கணக்கெடுப்பில் வீடுகளின் நிலை, குடிநீர், மின்சாரம், இணைய வசதி, சமையல் எரிபொருள், கழிப்பிடம், கணினி போன்ற வசதிகளுடன் வீட்டின் உரிமை, குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை, உட்கொள்ளும் உணவு, வாகனங்கள், அலைபேசி உள்ளிட்ட 33 கேள்விகள் கேட்கப்படும். கணக்கெடுப்பாளர்கள் அலைபேசி செயலிகள் மூலம் தரவுகள் சேகரிக்கப்படும். அதே சமயத்தில் தனிப்பட்ட தரவுகள் பாதுகாக்கப்படுவதும் உறுதி செய்யப்படும்.