இடுக்கி மாவட்டம் மூணார் –*பஞ்சப்படி விளக்கக் கூட்டம்.*—-சிறப்பு செய்தி .
*பஞ்சப்படி விளக்கக் கூட்டம்.* இடுக்கி மாவட்டம் மூணார் ஆர்சி தேவாலயம்( சர்ச்), விஎஸ்எஸ்எஸ் அரங்கத்தில் வைத்து நடைபெற்றது,தேயிலை, ஏலம், காப்பி, இரப்பர் தோட்டங்களில் பணிபுரிகின்ற ஏகதேசம் நான்கரை லட்சம் தோட்டம் தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த பஞ்சப்படியை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வழங்காமலிருப்பதை உடனடியாக வழங்க வேண்டும் என்றும்அதை வழங்க விடாமல் நிர்வாகங்களுக்கு கைக்கூலிகளாக செயல்படுகின்றதோட்டம் தொழிலாளர்களுக்கு எந்த விதத்திலும் உபகாரம் இல்லாத பொதுமக்களின் வரிப்பணம் வீண் விரயமாகின்ற அரசு அங்கீகாரமற்ற பிளாண்டேஷன் லேபர் கமிட்டியை(PLC) பிரித்து விட வேண்டும் என்றும்மதிப்பிற்குரிய மறைந்த முன்னாள் முதலமைச்சர், உம்மன்சாண்டி, அவர்களுடையஆட்சி காலத்தில் தேயிலை தோட்டம் தொழிலாளர்களின் நிலைமையை நேரில் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர், கிருஷ்ணன் நாயர் அவர்களைகமிஷனாக (ஆணையர்) நியமித்ததில் ஐயா அவர்கள் தோட்டம் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் சென்று ஆய்வு நடத்தி அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்ததின் அடிப்படையில்தோட்டம் தொழிலாளர்களுக்கு அரசு பாதி தொகையும், சம்பந்தப்பட்ட நிர்வாகம் பாதி தொகையும் கொடுத்து வீடு கட்டி கொடுக்க வேண்டும்என்கின்ற கிருஷ்ணன் நாயர் கமிஷன் அரசாணை அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டியும், அதே போன்றுபிஜு பிரபாகரன், அவர்கள்ஆய்வு செய்து அரசுக்கு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில்அரசு நிலங்களை கம்பெனிகள் கையகப்படுத்தி வைத்திருக்கின்ற28,758 (இருபத்தி எட்டாயிரத்து எழநூற்றி ஐம்பத்தி எட்டு) ஏக்கர் நிலமும்,அரசு தங்க விலை கொடுத்து வாங்கிய2236 ஏக்கர் நிலமும்,மூணார் டவுன்ஷிப்பிற்காக அரசு கையகப்படுத்திய500 ஏக்கர் நிலமும்,மாங்குளத்தில் LA படி (நில உரிமை சட்டம்) கையகப்படுத்திய 5100 ஏக்கர் நிலத்தில்1977-78 காலகட்டத்தில் அன்றைய தோட்டம் தொழிலாளர்களுக்கு 5 ஏக்கர் இரண்டரை ஏக்கர் என்று அன்றைய சட்டமன்ற உறுப்பினர்,மறைந்தகிட்டப்பநாராயணசாமி, அவர்களால் வழங்கப்பட்டதுபோக மீதம் இருக்கின்ற2,100 ஏக்கர் நிலத்தையும்,தேவிகுளம் கச்சேரி படி செட்டில்மெண்ட் படியுள்ள137ஏக்கர்,55சென்ட்,நிலங்களையும்அனைத்துதேயிலைதோட்டம்தொழிலாளர்களுக்கும் 25 சென்ட் நிலமும், வீடும் வைத்து கொடுக்க வேண்டும்அதேபோல் காட்டு மிருகங்களால் தாக்கப்பட்டு மரணிக்கின்றமனித உயிர்களுக்கு நியாயமான இழப்பீடும், (நஷ்டத்தொகை) அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் அரசு வேலையும்,
அதே காட்டு மிருகங்களால் தாக்கப்பட்டுஉயிரிழக்கின்ற வளர்ப்பு மிருகங்களுக்கும் நியாயமான இழப்பீடு (நஷ்டத்தொகை) வழங்க வேண்டும்.என்கின்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட கூட்டத்திற்கு வரவேற்புரை நிகழ்த்தியவர்,கரீம்,பஞ்சப்படி உயர்வு போராட்ட குழு.தோட்டம் தொழிலாளர்களின் எதிர்கால நலனை ஒளிமயமாக்குகின்ற சிறப்பு வாய்ந்த இந்த கூட்டத்தினை திறப்பு விழா செய்து சிறப்புரை ஆற்றியவர்,பெருமதிப்பிற்குரிய, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற முன்னாள், நீதியரசர், கமால்பாஷா,அவர்கள்.இந்தக்கூட்டத்திற்கு தலைமை வகித்தவர்,நா(மூணார்) மோகன்ராஜ்.பஞ்சப்படி உயர்வு போராட்ட குழு.
இந்தக் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய சிறப்புவிருந்தினர்கள்,வழக்கறிஞர், விவி,சுரேஷ்,
கேரளா உயர் நீதிமன்றம்.வழக்கறிஞரும், இந்தக் கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான, சிபி பினு,கேரளாஉயர்நீதிமன்றம். ஜெயபால்,தேசியஒருங்கிணைப்பாளர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இந்திய மக்கள் கூட்டமைப்பு. கிளிட்டஸ்,ஒரே இந்தியா ஒரே பென்ஷன், தொடுபுழா.மூணார்,ரியாஸ்,துணைத்தலைவர்,மனிதஉரிமைகழகம்இடுக்கி.பாதர்,அகஸ்டின், வட்டோலி,பொதுநல சேவகர்.பஷீர்,ரிலீப் கமிட்டி, ஆனச்சால்.கனக மணிகண்டன், பைசன்வாலி.ஸ்ரீதர்,ஓய்வுபெற்றகிராமஅலுவலர்,வில்லேஜ்ஆபிசர்).அகஸ்டின்,Spr,சொக்கநாடு.சக்திவேல்,சொக்கநாடு.திரேசா,கிராம்ஸ்லாண்ட்.மணி,Spr,தலைவர், ஹைரேஞ்ச் சூப்பர்வைசர் அசோசியேஷன்.ஜீவா, தேனி மாவட்டசெய்தியாளர்,டீ பிளாண்டேசன் டிரைவர் அசோசியேஷன்.மற்றும் மூணார் கேஎல்-68 யூடியூப் சானல்.நிகழ்ச்சியின் இணை ஒருங்கிணைப்பாளர்கள்,சண்முகநாதன்,பஞ்சப்படி உயர்வு போராட்ட குழு. பழனிச்சாமி,
பஞ்சப்படி உயர்வு போராட்ட குழு.இந்த கூட்டத்திற்கு நன்றியுரையாற்றியவர், ராமர்
பஞ்சப்படி உயர்வு போராட்ட குழு, பேக்கட்டிங் சென்டர். ஆகியோர் பங்கேற்றனர்…