அமைச்சர் நிர்மல்குமாரின் பேச்சால் பொதுமக்கள் குழப்பம்…
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து தமிழக அமைச்சர் நிர்மல் குமார் பிரச்சாரம் செய்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை ஆவேசமாக விமர்சித்த நிர்மல் குமார், திமுகவும் அதிமுகவும் இணைந்து தவெக ஆட்சியை கமிழ்க்க சதி செய்வதாக சாடியுள்ளார்.அப்போது பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளாலும்மக்களுக்குஎந்தநன்மையும்செய்யவில்லை. ‘அதிமுகவில் இருந்து இங்கு வந்து சேர்ந்துவிட்டார்கள் என்று பேசுகிறார்கள். இதையெல்லாம் சொல்ல எடப்பாடிக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா? திமுகவோடு சேர்ந்து, ஸ்டாலின் கூட சேர்ந்து, உதயநிதி கூட சேர்ந்து ஆட்சி அமைக்கணும்னு சொன்ன எடப்பாடிக்கு வெட்கமே இல்லையா?அதிமுக தலைமை அலுவலகம் போய் பார்த்திருப்பீர்கள். எம்.ஜி.ஆர் தன் சொந்தக் காசில் கட்டிய தலைமை அலுவலகம் அது. அந்த தலைமைக் கழகத்திற்குள் நுழையக்கூடிய தகுதியோ, அருகதையோ எடப்பாடிக்குக் கிடையாது. ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் அனைவரும் கோயில் மாதிரி போற்ற வேண்டிய இடம். அந்த இடத்தில் ஒரு கொலை நடந்தது.. அதை தொடர்ந்து பல கொலைகள் நடந்தது. அதை விசாரிப்போம் என்று சொன்ன திமுக ஏன் இன்னும் விசாரிக்கவில்லை? கொடநாட்டில் என்னென்ன மறைக்கப்பட்டது? ஏன் இந்த மௌனம்? நான்கு மாதங்களுக்கு முன்பு டிடிவி தினகரன் பேசியதை எடுத்துப் பாருங்கள். ‘கொடநாடு எஸ்டேட்டில் பணம் எடுக்க போகவில்லை; ஆவணங்களை எடுக்கத்தான் போனார்கள். அந்த ஆவணங்களில் என்ன இருந்தது, எடப்பாடி என்ன செய்தார் என்பது எங்களுக்கு தெரியும்’ என்று சொன்ன அதே டிடிவி தினகரன், இன்று எடப்பாடிக்கு ஆதரவாக பேசி கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட கேவலமான கூட்டமெல்லாம் சேர்ந்து இங்கு பிரச்சாரத்திற்கு வருகிறார்கள். இவர்கள் அரசியலில்இருந்தேஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட வேண்டும். அதற்காக தான் நான் இங்கு வந்துள்ளேன். திமுகவினருக்கு நான் சொல்கிறேன்.. உதயநிதி மாதிரி ஆளோடு சேர்ந்து கட்சியில் இருக்கும் நீங்கள், உங்கள் வீட்டில்போய்கேளுங்கள்..இப்படிபேசுபவருடன்நான்இருக்கலாமா,வீட்டில்உள்ளபெண்களுக்கு பாதுகாப்பு இருக்குமா என்று கேளுங்கள். வீட்டில் கேட்டுவிட்டு அந்தக் கருப்பு-சிவப்பு துண்டை போட்டுக்கொண்டு வெளியே வாருங்கள்.இது இடைத்தேர்தல் மட்டுமல்ல; உங்களுக்கான தேர்தல். தமிழகத்தில் மாற்றத்தை விரும்பி வாக்களித்தீர்கள். கடந்த நான்கு மாதங்களாக விஜய் ஒரு நேர்மையான, ஊழலற்ற அரசை கொடுத்து கொண்டிருக்கிறார். இன்று நீங்கள் தைரியமாக அரசு அலுவலகங்களுக்கு செல்ல முடிகிறதா, இல்லையா? லஞ்சம் கேட்டால் தைரியமாக சொல்லுங்கள் என்று முதல்வர் சொல்லியிருக்கிறார். பல அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது! அரசு அலுவலகங்கள் உங்கள் சேவைக்காகத்தான் இருக்கிறது. அரசை கவிழ்க்க குறுக்கு வழியில் திமுகவும் அதிமுகவும் வெட்கமே இல்லாமல் சதிசெய்கிறார்கள்.பகலிலேயேநிதானமில்லாமல்உதயநிதிபேசுவதைபார்த்தால்அவர்களின்அரசியல்எந்தநிலைக்குபோய்விட்டதுஎன்றுதெரிகிறது.எதற்கும்கவலைப்படாதீர்கள்.. வரும் காலங்களில் மேலும் பல இடைத்தேர்தல்கள் வரும். தமிழக அரசியல் களம் முழுமையாக மாறும்! வரும் தேர்தலில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு 100% வாக்களித்து வெற்றி பெற வைப்பீர்கள். திமுகவும் அதிமுகவும் டெபாசிட் கூட வாங்க கூடாது; அதை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு வாக்களியுங்கள்!” என்றார்.