fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

இடைக்கால பட்ஜெட்டுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வரவேற்பு!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

சேலம் அஸ்தம்பட்டியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மக்களுக்கு நன்மை செய்யும் அடிப்படையிலேயே மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.

இடைக்கால பட்ஜெட்டில் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என அவர் தெரிவித்தார்.

மேலும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.3000 ஓய்வூதியம் வழங்கும் திட்டம் வரவேற்கத்தக்கது.

பட்ஜெட்டில் கிராமப்புறங்களில் சாலைகள் மேம்படுத்த நிதி ஒதுக்கியதுக்கு அவர் வரவேற்பு தெரிவித்தார்.

வருமான வரி உச்சவரம்பு விலக்கு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதும் வரவேற்கத்தக்கது என முதல்வர் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து பேசிய முதல்வர் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு தான் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும். அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close