fbpx
Others

ஈரோடு–தாளவாடியில் சூதாடிய 9 பேர் கைது…

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் காசு வைத்து சீட்டு விளையாடுவதாக தாளவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் ரோந்து சென்ற போது பைனாபுரம் பகுதியில் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடி கொண்டிருந்த 9 பேரை பிடித்து விசாரணை நடத்தினர் .
விசாரணையில் அவர்கள் தாளவாடி, பைனாபுரம் பகுதியைச் சேர்ந்த சம்பா (60), சித்தமல்லப்பா (38), பசுவன்னா (38), பிரபு (42), வினோத்குமார் (23), பசுவன்னா (42), முத்து மல்லு (62), மல்லேஷ் (53), மணி (27) உள்ளிட்ட 9 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து சீட்டு கட்டு, ரூ.10340 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மாவட்ட நிருபர் SKT சுரேஷ்குமார்

Related Articles

Back to top button
Close
Close