fbpx
RETamil NewsTrending Nowதமிழ்நாடு

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்!

சென்னை:

திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது.

அவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என்று அவருக்கு சிகிச்சையளித்து வரும்  மருத்துவமனை நிர்வாகம் திங்களன்று தெரிவித்துள்ளது.

ஆக்ஸிஜன் தேவை பாதியாக குறைந்து, திங்களன்று மோசமடைந்தது என்று மருத்துவ மையம் தெரிவித்துள்ளது.

நேற்று மாலை முதல் அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளது. அவரது ஆக்ஸிஜன் தேவை மீண்டும் அதிகரித்துள்ளது.

மேலும் அவரது இதய செயல்பாடும் மோசமடைந்து வருகிறது, இரத்த அழுத்தத்திற்கு மருந்து கொடுக்கப்படுகிறது.

சிறுநீரக பாதிப்பும் அவருக்கு உள்ளதால் அவரது உடல்நிலை மோசமாக பாதிப்படைந்து வருகிறது.

இவ்வாறு மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் இளங்குமாரன் காளியமூர்த்தி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close